Vallalar Universal Mission Trust   ramnad......
மகாமந்திரத்தின் விளக்கங்கள்

ஒளி விளக்கம்

ஒரு மனித உடம்பிலிருந்து வெளியாகும் கவர்ச்சி ஒளியே தேஜஸ் என்கின்றோம். அதையே வள்ளலார் வெள்ளொளி என அழைக்கிறார். உயிரிலிருந்து அறிவாக வெளிப்படும் பிரகாசத்தை உயிர் ஒளி என்கின்றார். உயிருக்கு உயிரான ஆன்ம ஒளிப் பிரகாசத்தை உள்ளொளி என்கின்றார். வெள்ளொளியும், உயிரொளியும் முதல் இரண்டு அருட்பெருஞ்ஜோதியையும், ஆன்ம ஒளி தனிப் பெருங்கருணையுக் காட்டி ஜோதியுள் ஜோதியுள் ஜோதியான அருட்பெருஞ்ஜோதியை அடைய உதவுகிறது.

வெளி, ஒளிவிளக்கம்

முதல் அருட்பெருஞ்ஜோதியில் அண்டத்து ஜோதியையும், இரண்டாவது அருட்பெருஞ்ஜோதியில் பிண்டத்து ஜோதியையும் கண்டுகொண்ட மனிதன், தமது உள்ளத்தே பெருகிவரும் தனிப் பெருங்கருணையால் ஜீவர்களுக்குத் தொண்டு செய்து, இறுதி ஜோதியாகிய அருட்பெருஞ்ஜோதியோடு கலந்து தெய்வமாகிறான்.

அனுப விளக்கம்

முதல் அருட்பெருஞ்ஜோதி புருவ இறை அனுபவத்தையும், இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி உயிர் இறை அனுபவத்தையும் பெற்று தனிப்பெருங்கருணையால் அருள் அனுபவம் எய்தி உயிருக்கு உயிரான ஆன்ம அனுபவம் கூடி கடைசி அருட்பெருஞ்ஜோதியில் கலக்கிறது.

முத்தேகச் சித்தி விளக்கம்

சுத்த தேகம், பிரணவ தேகம் பெற்றவர்கள் முதல் இரண்டு அருட்பெருஞ்ஜோதியையும், ஞான தேகம் பெற்றவர்கள் தனிப் பெருங்கருணையையும் பெறுவதால் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு கடவுள் மயம் ஆகிறார்கள்.

விஞ்ஞான விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி என்ற இறைவனின் பெயர் மூன்று ஒளியைக் குறிக்கிறது.

வெள்ளொளி .. கண்

உயிரொளி .. மூளை,

உள்ளொளி .. இதயம்

உயிர்கள் துன்பத்தைக் கண்டு கண்ணொளி காருண்யத்தைக் காட்டும். மூளை அருட்சிந்தனை செய்யும். இதயத்தில் கருணைப் பிறக்கும். கருணை அருட்பெருஞ்ஜோதி மயமாக்கும்.

மொழி விளக்கம்

தமிழ் மொழியில் ,,,, இவ்வைந்தும் உயிரெழுத்துக்கள். ஒரு உயிரெழுத்து மெய்யெழுத்தோடு இணைந்தால் உயிர்மெய் எழுத்துப் பிறக்கும். இது மொழியின் இலக்கணம். உயிரின் தத்துவம் இது தான் மேற்குறிப்பிட்ட ஐந்து எழுத்துக்களுக்கும் இணையாக ஆங்கிலத்தில் A,E,I,O,U என்ற எழுத்துக்கள் (vowels) உள்ளன. இந்த ஐந்து உயிரெழுத்துக்களும் மகா மந்திரத்தில் அணி செய்வது வியப்புக்குரியது. இதைச் சிந்தித்து, வந்தித்து உய்வோமாக. மந்திரம் மகா மந்திரமாவது இந்த உயிரெழுத்துக்களால்தான் என்றால் அது மிகையாகாது.

வள்ளலாரின் மகா மந்திரம் எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணுகின்ற தெய்வத்தின் குரல். அது உலகெங்கும் ஒலிக்க வேண்டும். உலகம் அன்பு வயப்பட வேண்டும் அருளைப் பொழிய வேண்டும். தொண்டு செய்ய வேண்டும். உயிர்கள் துயர் துடைக்க வேண்டும். அதுவே சுத்த சன்மார்க்கத்தின் சத்திய வேதமாகும்.

ஆதாரம்

வள்ளலாரின் மெய்ஞானமும்

பேரா டாக்டர்.பி.கி. சிவராமன்

P Sujatha
KarunaiMughu Rajaveer JothiMurugan,
Thankyou for Dr.SivaRaman's Book Informations.This informations are my Favourite.
Wish you Vallalar blessings.
With Vallalar Loving,
AruljothiSujatha.
Thursday, November 13, 2008 at 21:06 pm by P Sujatha