வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தின் நின்றீர் வட்டியை
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை யறியீர்
பெட்டிமேற் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை
நிரப்பிக் கொண் டொட்டியுள் ளிருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவு நேரீர் பழங்கஞ்சி யாயினும்
வழங்கவு நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோற் கிளைத்தீர் எத்துணை
கொள்கின்றீர் பித்துலகீரே
கருணை நிறைந்த ஆன்ம நேய அன்பர்களுக்கு பெருமான் சொல்லுவது வட்டிக்கு வட்டி வாங்கும் வழியிலே செல்கின்றீர் ஏழையின் வயிற்றுப் பெட்டியில் போட்டு கருணையாம் தயவைப் பெறக்கூடிய வழியிலே செல்லமாட்டீர்கள். பெட்டிமேல் பெட்டி வைத்து இன்பமாய் ஆளுகின்றீர். வயிறு புடைக்க உணவு உண்டு வீட்டில் ஆனந்தமாய் இருப்பீர்கள். ஆனால் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் மாட்டீர்கள் என்று பழங்கஞ்சியாயினும் கொடுத்து உண்ணும்படிச் சொல்ல மாட்டீர்கள். எட்டி மரம் போல் வாழ்கின்றீர் கொட்டியைப்போல் கிளைத்தீர், எந்தத் துணையைக் கொள்ளுகின்றீ, பித்துலகீரே.
Write a comment