Vallalar Universal Mission Trust   ramnad......
உபதேசங்கள்2

இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை ( தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகா மந்திர வாக்கியத்தை) எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த உண்மையறிவானுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன். குறிப்பிக்கின்றேன். குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே. ஆண்டவர் முதற்சாதனமாக.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் திருமந்திரத்தை, வெளிப்படையாக எடுத்துக்கொண்டார். தயவு கருணை அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்பானுவம் பெறுவதற்குத் தடையில்லை.
எல்லாப் பிறப்புடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய ஆறறிவுள்ளது இம்மனிதப் பிறப்புடம்பு,
முக்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பது ஆதலால் எவ்விதத்தாலாயிலும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.
அநித்யம் என்பது அரிபிரமாதிகளுக்கும் உள்ளது. முத்தியடையும் வரையில் தேகம் வேண்டும்.
அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப் பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.
இந்த உடம்பை அலக்ஷியம் பண்ணாமல் பொன்னைப் போல் பார்க்க வேண்டும்.
உத்தியோகம் தடையாயிருந்தால் அதை விடுத்து தேகத்தைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பின்பு சிவானுக்கிரகத்தால் உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளலாம். அது பரியந்தம்( அதுவரை) கடன்பட்டாவது ஜீவனம் செய்யலாம். அது குறித்து அஞ்சவேண்டாம்.
தயுவு