Vallalar Universal Mission Trust   ramnad......
ஆன்மா

6.1.
ஆன்மா – இத்தூல தேகத்தில் எப்படி இருக்கிறது?
ஆன்மா – இத்தூல தேகத்தில் ஜீவனாக இருக்கிறது.
6.2.
சுக துக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும் எவற்றில் பிரதிபலித்தப் புறத்தில் தோன்றுகின்றன?
சுக துக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும் மனம் முதலான கரணேந்திரியங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றன.
6.3.
சுக துக்கங்களை அறிந்து அனுபவிப்பதற்கு ஆன்மாவுக்கு எவை உபகாரக் கருவிகளாக இருக்கின்றன?
சுக துக்கங்களை அறிந்து அனுபவிப்பதற்கு ஆன்மாவுக்கு கரணேந்திரியங்கள் உபகாரக் கருவிகளாக இருக்கின்றன.
6.4.
ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது வெளிப்படும்?
1. பசி
2.கொலை
3.பிணி
4.ஆபத்து
5.தாகம்
6.பயம்
7. இன்மை
8.இச்சை – இவைகளால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், கேட்டபோதும், அறிந்தபோதும் ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறிய வேண்டும்.
6.5.
ஆன்மாக்கள் – முயற்சி பேதத்தால் தேக போகங்களை அடைவது உண்மை – என்று எதனால் அறிய வேண்டும்?
ஆன்மாக்கள் – முயற்சி பேதத்தால் தேக போகங்களை அடைவது உண்மை என்பதை யுக்தியால் அறிய வேண்டும்.