Vallalar Universal Mission Trust   ramnad......
திரைநீக்கும்பூசைகள்

திரைநீக்கும்பூசைகள்
முதல் திரை
கரைவின்மாமாயைக்கரும்பெருந்திரையால்
அரைசதுமறைக்குமருட்பெருஞ்ஜோதி
கருப்புத்திரைதான் நமது ஆன்மாவைத் தெரியச் செய்யாமல் அழுத்தமாக மூடி இருக்கும் திரை. அத்திரை ஜீவகாருணியப் பலனால் முதலில் விலகுகிறது.
இரண்டாம் திரை
பேருறுநீலப்பெருந்திரையதனால்
ஆருயிர்மறைக்குமருட்பெருஞ்ஜோதி
நீலத்திரை நமது ஆன்மாவை ஒளிரச்செய்யாமல் இருள் நிலையில் வவத்திருப்பது. இவைஇரண்டையும் அசுத்த மாயைத் திரைகள் என்பார்கள்.
மூன்றாம் திரை
பச்சைத்திரையாற்பரவெளியதனை
அச்சுறமறைக்கமருட்பெருஞ்ஜோதி
பச்சைத் திரை உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதாலும் ஆண்டவர் இடத்தில் அன்பு செலுத்துவதாலும் நீங்குகிறது.
நான்காம் திரை
செம்மைத்திரையாற்சித்துறுவெளியை
அம்மையின்மறைக்குமருட்பெருஞ்ஜோதி
சிவப்புத்திரையானது ஆன்மா சற்றே ஒளிபெற்று பெரிதும் இருளாகி நிற்பதைக்குறிக்கின்றது. இந்தப் பச்சைத் திரையும் சிவப்புத் திரையும் அசுத்த சுத்த மாயைத் திரை என்பார்கள்.
ஐந்தாம் திரை
பொன்மைத்திரையாற்பொருறுவெளியை
அன்மையின்மறைக்குமருட்பெருஞ்ஜோதி
ஆன்மா காருண்யத்தால் கூடுதலாக ஒளிபெற்று விளங்குவதை குறிக்கிறது பொன்மைத்திரை.
ஆறாம் திரை
வெண்மைத்திரையான்மெய்பதிவெளியை
அண்மையின்மறைக்குஅருட்பெருஞ்ஜோதி
, ஆன்ம பூரண மாக ஒளியுடன் விளங்கும் நிலையைக் குறிக்கின்றது.
ஏழாம் திரை
கலப்புத்திரையால்கருதனுபவங்களை
அலப்புறமறைக்கும்அருட்பெருஞ்ஜோதி
ஆன்மாவின் அடையாளமாகிய கண்ணாடி திருநிலைக்கண்ணாடி அந்தக் கண்ணாடியில் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதக் காட்சியாக தெய்வக் காட்சியாக பிரகாசமாக ஜொலிக்கின்ற அருட்பெருஞ்ஜோதி தரிசனம், தனிபெருங்கருணை தரிசனம்.
தயவு