உபதேசங்கள்
என்னை ஏறாநிலைமிசையேற்றி விட்டது யாதெனின் தயவு. தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.
ஆதலால், காலந்தாழ்க்காது எல்லா உயிர்களையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.
சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் ஏதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதை கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும்.
ஆனந்தமென்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷிப்பித்துத்தான் அதிசயமின்றி நிற்றல்.
ஜீவதயை என்பது தன் சக்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது, ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவாயிருத்தல்.
சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவது போல் சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.
எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத்தான் பட்டினியிருப்பதல்ல அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்திக் கொடுத்தும் சகிப்பார்களாகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும் அதற்கும் இடம் இல்லையாகில் பச்சாதாபத்துடன் கடவுளை பிராத்தித்து இன் சொல்லினால் இனிக்கச் செய்து தான் கெட்டிருப்பதே( தன் முனைப்பின்றி இருப்பதே) மேலான புண்ணியம்.
ஒருவன் பிராத்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன.
These are great words and we are all fortunate to hear this.
Monday, August 11, 2008 at 20:32 pm
by uthira38
Write a comment