Vallalar Universal Mission Trust   ramnad......
புருவ மத்தியின் சிறப்பு

புருவ மத்தியின் சிறப்பு
1. நம் தேகத்தின் மூன்றாவது கண் புருவ மத்தி
2. இந்த இடத்தில் ஆன்மா விளக்க விசேஷம் உள்ளது.
3. இதற்கு முச்சுடர், முப்பால், மஹாமேரு, இலாடம் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
4. தகுந்த குரு மூலம் மூன்றாவது கண் ஆகிய நெற்றிக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
5. நெற்றிக் கண்ணை திறக்கப் பெற்றவர்களுக்கு எல்லா விஷயங்களூம் பட்ட பகல் வெளிச்சம் போல் தெரியும், இவர்கள் பார்வையினால் இறந்தவன் உயிரோடு எழுவான்.
7 Comments
arulk8
புருவ மத்தி என்பது ஹிப்னடிசத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
பெண்கள் பொட்டு வைப்பது தங்களை யாரும் வசியம் செய்வதில் இருந்து தப்பத்தான்,
Wednesday, August 13, 2008 at 07:55 am by arulk8
Tanjore Gangaprasad Ramalingam
Needs a lot of practice,total awerness,blank mind like an empty cup ready to recive the nector.
T.G.Ramalingam
ramalingamtg1942@yahoo.co.in
Banglore-India
Tuesday, August 25, 2009 at 11:15 am by Tanjore Gangaprasad Ramalingam
P Sujatha
கருணைமிகு அன்பர்களுக்கு,
தயவு,கருணையை வாழ்வின் குறிக்கோளாக கொண்டு வாழும் அன்பர்களுக்கு நல்ல சுத்த சன்மார்க்க பெரியோர்கள் குருவாக வாய்க்க பெறுவார்கள்.தயா பெருஞ்சோதி இறைவனையும்,வள்ளல் பெருமானையும் கருணையில் கண்டு கொள்பவர்களுக்கு கடவுள் சன்மார்க்க அன்பர் மூலம் தன் திருவடியை வெளிபடுத்துவார்.ஒருவரிடம் கருணையுள்ள பார்வையால் தயவு செய்யலாம்.தயவு உள்ளவர்கள்,கருணை உள்ளவர்கள் கடவுள் அறிவை பெறுவார்கள்.வள்ளலார்
கருணையுடன், அருள்ஜோதிசுஜாதா.
Friday, August 28, 2009 at 04:25 am by P Sujatha
kseethamani
புருவ மையத்தை ஆக்கினைச் சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனத்தைக் குண்டலினியில் ஒடுக்கிப் பழக, உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடார்பு விளங்கும். உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்க்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலை தான் மாயை எனப்படும்.
மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில், ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.
Sunday, September 6, 2009 at 20:35 pm by kseethamani
kseethamani
SKY என்னும் எளியமுறை குண்டலினி யோகத்தில் (Simplified Kundalini Yoga) முதற்படி இது. மூலாதாரத்தில் உறங்கிய குண்டலினி சக்தியை ஆசிரியர் தன் தவ வலிமையால் முதுகந்தண்டு வழியே தூக்கி நடத்தி வந்து, நெற்றியில் புருவ மத்தியில் வைக்கிறார். இம்மாற்றமே ஆன்மீக உயர்வுக்குத் திருப்புமுனை. தனது உயிர் எப்படி இருக்கும் என்பதை ஐம்புலனில் ஒன்றான ஊறுணர்ச்சிக் எட்டச் செய்து, அதன் மூலமாக மனத்திற்கு அகமுக நோக்குக் கொடுக்கப்படுகிறது. இதுவரை மனம் வெளியில் பார்த்துக் கொண்டிருந்தது, வெளிப்பொருட்களில் சிக்கிக் கொண்டு இருந்தது. இனி அது உள்ளே பார்க்கும், அதாவது தன்னையே பார்க்கும். உள்ளொளி பூரித்து உயிருக்கு மேனோக்கு வேகத்தைத் தரும்.
இரு விழிகள் மூக்குமுனை குறிப்பாய் நிற்க,
எண்ணத்தைப் புருவங் களிடைநிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்
கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்
அருவ நிலை யாம்ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்க மாகும்.
(தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் - உலக சமாதானம் 233)
ஏறுபடி என்று சொல்லப்படும் ஆக்கினைத் தவத்தினால் பொருள் கவர்ச்சி நீங்கும். தன்னிலை விளக்கம் கிடைக்க வழி திறக்கும். விரும்பிய நல்வழியில் நிற்கும் திறன் கிடைக்கும். ஆசை அளவோடு நிற்கும், பேராசையாக விரியாமல் தடுக்கப்படும். விளைவறிந்து செயல்படும் அயரா விழப்புநிலை கிடைக்கும். புறமனத்திற்கு நுட்பமும், வேகமும்-விருத்தியாகும். பொருள் அனுபோகத்திலேயே நாட்டம் செல்வது தவிர்க்கப்படும். புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். Suppresion, முரட்டு வைராக்கியம், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கடுஞ் சித்தம் இவை ஏதும் இன்றி, இயல்பாகவே புலன்கள் அடங்கிப்போகும்.
ஆக்கினையின் பெருமையை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன் மகிமையைப் பெரியோர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நாசிநுனி என்றால், துவாரங்கள் இருக்கும் கீழ் நுனி அன்று, நெற்றியை ஒட்டிய மேல் நுனியாகும். முத்து முகப்பு என்று இதனைச் சித்தர்கள் அழகுற வர்ணித்துள்ளனர். புருவங்கள் இரண்டும், மூக்கும் கூடும் முச்சந்தி வீதி என்ற உவமை ஆகுபெயராக இதனை விளக்குவார்கள். ஐந்து ஆதாரங்களுக்கும் மேலே ஆக்கினையானது ஆறாவதாக இருப்பதால், பஞ்சனை மேல் இருக்கை என்று உருவகப்படுத்துவார்கள்.
Friday, September 18, 2009 at 23:44 pm by kseethamani
gkans12
when your mind is no thoughts and when you calm in good incident or bad incident , so many things required , it is not easy but possible who obey and believe his gurus words. i dont know every body talking this subject . first search a guru for you and follow his path way , all things will come
Saturday, September 19, 2009 at 00:32 am by gkans12
hariharan_82
இந்த புருவ மத்தியின் சிறப்பினை யார் தற்போது சிந்திக்கின்றார்கள்.
அடுத்தவன் என்ன தவறு செய்கின்றான் என்பதைத்தான் கவனித்து
தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றனர்.
புருவ மத்தியின் பால் கவனம் சென்றால், பிறத்தியாரை சன்மார்க்கிகள்
யாரேனும் பார்ப்பார்களா...
சங்கங்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா...
வெறும் அன்னதானம் மட்டும் போட்டுவிட்டு, அக வழிபாட்டினை
யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்கின்றனர்.
அடுத்த நாளுக்கு மெனக் கெட வேண்டியிருப்பதால்,
அது குறித்து அவர்களுக்கி சிந்தனையும் கிடையாது.
Monday, December 7, 2009 at 23:35 pm by hariharan_82