Vallalar Universal Mission Trust   ramnad......
உபதேசங்கள்

உபதேசங்கள்
பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பரஜீவகாருண்யம். அருளைப் பெறுவதற்கு ஜீவகாருண்யமே வழியாகலால் ஞானவழியென்பதும் சன்மார்க்கமென்பதும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும்; அஞ்ஞான வழியென்பதும் துன்மார்க்கம் என்பதும் ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும்.
அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம், அல்லது கடவுள் தயவு. ஜீவகாருண்யமென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்களின் தயவு.
அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற்படியா யிருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.
தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
ஆதலால் மேல் குறித்த ஆசாரங்கள் ஒழிந்து பொது நோக்கம் வந்தால் மேற்படி காருண்யம் விருத்தியாகக் கடவுளருளைப் பெற்று அனந்த சித்தி முத்திகளைப் பெறக் கூடுமே யல்லது இல்லாவிடில் கூடாது.
என்னை ஏறாநிலைமிசையேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.
தயவு
2 Comments
Vallalar Groups
"தயவு தான்" அருளுக்கு அடிப்படை என்பதை தயவுடன் சொல்லபட்டிருக்கிறது
என்றும் அன்புடன்
கார்த்திகேயன்
Wednesday, August 6, 2008 at 05:56 am by Vallalar Groups
thiruaruljothi
I just read this article.very useful to me.But some brothers including my son (called as on base of age) Karthikeyan was not understanding and accepting the obstacles to create karunya/daeiou/compassion from the date of posting this article till this date. I awaite my son.
Thursday, June 17, 2010 at 09:08 am by thiruaruljothi