Vallalar Universal Mission Trust   ramnad......
ஒருவேளை போஜனம்

ஒருவேளை போஜனம்
உங்கள் பாடல்களைத் தொகுத்து நூலாக்கும் வரை ஒருவேளையே உண்பேன், என்று இறுக்கம் ரத்தின முதலியார் இராமலிங்க அடிகளாருக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்தார்.
1858ஆம் ஆண்டில் அடிகளார் சென்னையிலிருந்து வடலூர் பக்கம் சென்றதும் இறுக்கம் ரத்தின முதலியாருக்கு அடிகளாரின் பாக்களைத் தொகுத்து நூலாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அடிகளாருக்குக் கடிதங்கள் பல எழுதினார். ஆனால் அடிகளார் தமது பாடல்களை அச்சிடுவதில் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இறுக்கம் ரத்தின ,முதலியார் தமது முயற்சியில் சிறிதும் தளராதவரக தொடர்ந்து அடிகளாருகுக் கல்லும் கரையும்படியான கடிதங்களை எழுதி வந்தார்.
அவ்வாறு எழுதும் பொழுது ஒரு கடிதத்தில் தான் இனி ஒருவேளை மட்டுமே உண்பேன். நூலாக்கப் பணிக்கு அனுமதி வழங்கும்வரை இவ்வாறுதான் இருப்பேன்’ என்று இறுக்கம் ரத்தின முதலியார் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
அக்கடிதத்தைக் கண்டதும் அடிகளார் உடனே பதில் கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார்.
அன்புள்ள என் கண்மணி பொன்ற தாம் இனி இதனடியில் எழுதுகின்றா வண்ணம் செய்ய பிரார்த்திக்கிறேன். ஒருவேளை போஜனந்தான் செய்வேன் என்று எழுதியதைப் பார்த்த பின்பு நான் சாப்பிடுகிறா சாதம் உடம்பில் பொருந்தவில்லை. பட்டினி கிடந்தவனைப் போல இருக்கிறேன். என்னை நிம்மதியுள்ளவனாக்க எண்ணங் கொண்டு ஒருவேளை போஜனம் கொள்ளுகிற நிபந்தனை நீக்கி உடனே தபாலில் தெரிவித்தால் அல்லது நான் சலிப்பைத் தவிரேன். ஒருவேளை போஜனம் உள்ளவனாகவே இருப்பேன்.
இறுக்கம் இரத்தின முதலியாரின் முயற்சி திருவினையாயிற்று. அடிகளார் தமது பாக்களை அச்சிட்டு நூலாக்க இசைவு தந்தார். 1858இல் தொடங்கிய முயற்சிநூல் வடிவம் பெற, பத்தாண்டுகள் ஆயிற்று.
தயவு