Vallalar Universal Mission Trust   ramnad......
மக்களை மயக்கப் பிடியிலிருந்து விடுவிக்க வள்ளலார் செய்த சீர்திருத்தம்

மக்களை மயக்கப் பிடியிலிருந்து விடுவிக்க வள்ளலார் செய்த சீர்திருத்தம்
வள்ளலார் செய்த சீர்திருத்தங்களீல் மற்றொன்று மக்களைக் கட்குடியிலிருந்து சீர்திருத்தலாகும்.
இந்த கட்குடி என்பது இன்று நேற்று சமுதாயத்தைல் இருக்கவில்லை சங்க காலத்திலேயே இருந்ததாகும்.
வள்ளலார் வாழ்ந்த சமுதாயத்தில் மக்கள் கள்ளுண்டு மகிழ்ந்திருக்ட்கின்றார்கள். இதனால் நாடு பொருளாதாரம் ஒழுக்கம் ஆகியவற்றால் சீர்கேடுகள் அடைந்தது. எனவே இக்கட்குடியை மக்களிடமிருந்து அகற்ற வள்ளலார் பெரிதும் விரும்பினார்,
கள் உண்ணுவது எவ்வெவ் நிலைக்கு ஒருவனைக் கொண்டு செல்லும் என்பதனைக் கள்,காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் கொடிய துன்பத்தை உண்டு பண்ணும் இவ்வைந்திலும் கொலை விசேட பாவம் எனினும், கள் உண்டவனுக்குக் காமம் உண்டாகாமல் இருக்காது. கொலை செய்யத் துணிவு வராமல் இராது. அவன் களவு செய்யாமல் இரான். பொய்பேச அஞ்சாவ, ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம், இவற்றில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும், அவனை மற்றவை தொடராமல் இரா என வரையறுத்துக் கூறியுள்ளார்.
கள்ளை உண்டவர்கள் மயக்க உணர்வை அடைவர் சிறு மூளை பாதிக்கப்பட்டு அறிவு செயலிழக்கும், உடலை, உயிரை, அறிவை அழித்துவிடும் தன்மை வாழ்ந்தது கட்குடி அறிவை, அருளை, ஆனந்தத்தைத் தரும் இறைவனை விடுக்கும். இம்மூன்றையும் அழிக்கும் கள்ளைக் குடிக்கின்றார்களே என்ப இதனை.
மதிப்பாலை அருள் பாலை ஆனந்தப் பாலை
உண்ண மறந்தார் இல்லோர்
விதிப்பாலை அறியேம் தாய்ப்பலை உண்டு
இடந்தழுது பிளவிற் கேற்பக்
கொதிப்பாலை உணர்வழிக்கும் கடிப்பாலை
மடிப்பாலைக் குடிப்பார் அந்தோ
துதிப்பாலை அருள்தரும் நம்தேசிகர்
மணித்தேவைத் துதியார் அந்தோ.
(வள்ளலார் தனிப்பாடல்கள் 76)
சமுதாயத்தில் வாழ்ந்த மக்கள் எத்தகைய தீயச் செயல்களில் நாளும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனைக் குறிப்பிடும்போது ஈன்றெடுத்த தந்தையும் வெறுக்கும் கள் அருந்துகிறார்கள் சூதாடுகிறார்கள். காமம் விளைவிக்கும் இடங்கள் தோறும் மயங்கி நிற்கிறார்கள். இத்தகைய தீச் செயல்களைத் தான் செய்யவில்லை என்கின்றாஅர் வள்ளலார் இக்கருத்துக்கள் உள்ளடக்கிய தொடர்
வள்ளல் இவ்வுலகில் தந்தைய வெறுப்ப
மக்கள் தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந்துதல் சூதாடுதல் காமக்
கடைந்தோறும் மயங்குதல் பொய்யே
மெய்ய நின் திருப்பணி விடுத்தே
எள்ளி அவ்வாறு புரிந்த தொன்றுண்டோ
எந்தை நின் ஆணைதான் அறியேன் என்றார்.
தயவு