Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் கண்ட புலால் மறுப்பு

வள்ளலார் கண்ட புலால் மறுப்பு
புலால் மறுத்தல் பற்றிய வள்ளல் பெருமான் கருத்து மிக மிக ஆழமானது! நுட்பமானது ஆகும். நவீன அறிவியலார் கண்டு பிடித்திருக்கும் அறிவியல்படி நம் உடம்பு என்பது பல்கோடி அணுக்களால் ஒன்று சேர்ந்த ஒரு பொருள். நம் உடலுக்குள் பல கோடிக்கணக்கான அணுக்கள் ஒவ்வொரு கணத்திலும், அழிந்து கொண்டும் உருவாகிக்கொண்டும் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாகி, பல அணுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள இரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றன. ஆகையால், தொடர்ச்சியாக இரத்த ஓட்டம் ஒழுங்காகச் செயல்பட்டு உடல் வளர்ச்சியடைகிறது. இது அறிவியல் கூற்று. அப்படியானால் நாம் உண்ணுகிற உணவில் பிற பிராணிகளின் தசைகள் அணுக்களாக மாறி இரத்தமாகி, இரத்த நாளங்களின் வழியே பரவி அவை நம் உடலில் ஒன்றிவிடுகிறது. இப்படியே பல தலைமுறைகள் தொடர்ந்தால், மனிதர்களுக்கும், அந்த பிராணிகளின் குணம், செயல்பாடு, திறம் இவை வந்துவிடக்கூடும், இன்னும் பல தலைமுறைகள் கழித்து, மனித இனம், விலங்கினம் இரண்டும் கலந்த ஒரு தனி இனம் உருவாகி விடக்கூடும். புலால் உண்பதால், இத்தகைய வருங்கால விளைவுகள் ஏற்பட்டு விடக்கூடும் என்பதால்தான், புலால் மறுத்தலை மிகவும் கடுமையாக வலியுறுத்திக் கூறுகின்றனர் வள்ளலார் அவர்கள்! ஏனெனில் பல பிறவிகளின் முடிவாக நாம் பெறும் பேறு பெற்ற இந்த மனித உடம்பைக்கொண்டிருக்கிறோம்! அத்தகைய இந்த மனித உடம்பை மாசு படுத்திவிடக்கூடாது! அதனால் மனித இனத்துக்கே தீங்கு ஏற்பட்டு விடக் கூடும் என்பதுதான் வள்ளலார் கண்டுபிடித்த பேருண்மை.
3 Comments
Ramanujam jam
புலால் மறுத்தலை வலியுறுத்துவதற்கு அடிப்படையான ஒரு அருமையான கருத்து இது..
Tuesday, July 15, 2008 at 05:55 am by Ramanujam jam
siva b
அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அருமையான விளக்கம். நன்றி.
Wednesday, July 16, 2008 at 23:57 pm by siva b
arunsankar.a
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
Tuesday, October 27, 2009 at 00:19 am by arunsankar.a