சுத்தநெறியும் அருட்பாவும் யாருக்குரைத்தது
உலகினர் யாவரையும் அழைத்துக் கூறினும், மோக மாந்தருக்கு அவர் அருள் நெறியை உரைக்க வில்லை எனவும் யோகமாந்தருக்கு உரைத்தது எனவும் பெருமான் கூறுகிறார்.
ஆகமாந்தமும்வேதத்தின்அந்தமும்அறையும்
பாகமாம்பரவெளிநடம்பரவுவீர்உலகீர்
மோகமாந்தருக்குரைத்திலன்இதுசுகம்உன்னும்
யோகமாந்தர்க்குக்காலமுண்டாகவேஉரைத்தேன்.
-அன்புருவானசிவம்ஒன்றேஎனல்….6
வள்ளலார் உலகில் தோன்றக் காரணம்
வள்ளல் பெருமானைப் போன்று சுத்த பிரணவ தேகசித்தி பெற்ற ஞானியர் இன்று உளராவென்று பலர் நினைக்கக் கூடும். இன்றும் பலர் உளர். ஆனால் அவர்களை நாம் அடையளாம். கண்டு பிடிக்கப்பட முடியாதவாறு இவ்வுலகில் இருப்பர். இப்படி இருக்க வள்ளல் பெருமான் மட்டும் எல்லாரும் அறியும்படி ஏன் இருந்தார் என்று கேட்கக் கூடும். அவரே அதற்குக் காரணம் கூறுகின்றார்.
அவ்வண்ணம்பழுத்தவரும்அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம்ஓர்சிறிதுகுருஅருளாலேஅந்தச்
செவ்வண்ணம்பழுத்ததனித்திருவுருக்கண்டெவர்க்கும்
தெரியாமல்இருப்பம்எனச்சிந்தனைசெய்திருந்தேன்
இவ்வண்ணம்இருந்தஎனைப்பிறர்அறியத்தெருவில்
இழுத்துவிடுத்ததுகடவுள்இயற்கையருட்செயலோ
மவ்வண்ணப்பெருமாயைதன்செயலோஅறியேன்
மனம்ஆலைபாய்வதுகாண்மன்றில்நடத்தரசே
- தற்போதஇழப்பு– 1
கடவுள் அருள்பெற்ற ஞானிகளும் சித்தர்களும் பொதுவாக உலகில் தம்மைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பெருமான் கரண ஒழுக்கத்தில், ‘தன்னைக் காட்டாது ஒளித்தல்’ என்பதும் ஓர் ஒழுக்கமாக கூறுகின்றார். இதனால் தான் பெருமான் வெள்ளாடையால் தன்னை முழுவதும் மூடிக்கொண்டதும், அவர் வரலாற்றை சரியாக அறிய முடியாததும் ஆகும். இந்த நிலையிலும் பெருமான் வெளிப்பட உலகில் தோன்றக் காரணம் யாது? பெருமானே கூறுகிறார்:-
அகத்தேகறுத்துப்புறத்துவெளுத்திருந்தஉலகர்அனைவரையும்
சகத்தேதிருத்திச்சன்மார்க்கசங்கத்தடைவித்திடஅவரும்
இகத்தேபரத்தைப்பெற்றுமகிழ்ந்திடுதற்கென்றேஎனைஇந்த
உகத்தேஇறைவன்வருவிக்கஉற்றேன்அருளைப்பெற்றேனே.
-உள்ளதுஉரைத்தல் - 9
2 Comments
" உயிர் கொலையும், புலைபொசிப்பும் உடையவர்கள் உறவினதர் அல்லர் .அவர்களுக்கு பண்பு உறையேல் நண்பு உதவேல்."
They have not shown their existence to humanity.
whereas Vallal Peruman alone has shown his existence just to show the proper way (Suddha Sanmargam) to the
community so as to attain Siddhi.
Daeiou Team