Vallalar Universal Mission Trust   ramnad......
ஏழு வண்ணத்திரைகள்

ஏழு வண்ணத் திரைகள்
“ஏழு திரைகள் தயார் செய்யுங்கள்” என்று இராமலிங்க வள்ளலார் தமது அணுக்கச் சீடர்களிடம் கூறியருளினார். ஏழு திரைகள் என்ன வண்ணத்தில், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். அவ்வாறே திரைகள் தயாராயின.
வடலூர் சத்திய ஞானசபையில் கண்ணாடியை ஸ்தாபிதம் செய்த பின்பு அதன் முன்பாக விளக்கு ஒன்று வைக்கப்பட்டது. ஜோதி மண்டபத்தில், அருட்பெருஞ்ஜோதியை மறைப்பதுபோல ஏழு திரைகளும் அடுத்தடுத்துத் தொங்கவிடப்பட்டன.
ஒவ்வொரு திரைக்கும் ஒருவகையான தத்துவ விளக்கத்தை வள்ளலார் விளக்கியுரைத்தார்கள்.
கறுப்பு - மகாமாயை
நீலம் - மாயா சக்தி
பச்சை - கிரியாசக்தி
சிவப்பு - பராசக்தி
மஞ்சள் - இச்சாசக்தி
வெண்மை - ஞானசக்தி
கலப்பு - ஆதிசக்தி
ஜோதி வடிவமான இறைவனை தரிசிக்க வேண்டுமானால் மனிதர்களை இயக்கும் மனிதர்களை இயக்கும் ஏழு சக்திகளையும் ஒவ்வொன்றாக அகற்ற வேண்டும். இதன் அடையாளமாகவே சத்திய ஞானசபையில் ஏழு திரைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை நீக்கிவிட்டால் ஜோதி தரிசனம் பெறலாம்.
விக்கிரக வழிபாட்டை விலக்கி ஜோதி வழிபாட்டை நிறுவினால் ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றுபட முடியும் என்ற காரணத்தினால் வள்ளலார் ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்தார். அகமும் புறமும் தூய்மை பெற்றவர்களாக, ஒருமை நினைவுடன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதே அவரது கோட்பாடாக இருந்தது. மாயை எனும் அறியாமை இருளை அகற்றினால் இறையருள் ஜோதி வடிவாக நம்முன்னே தரிசனப்படும் என்று பெருந்தத்துவத்தின் விளக்கமாக சத்திய ஞானசபையிலே ஏழு திரைகள் தொங்கவிடப் பட்ட நிகழ்ச்சி சுவையானதும் பொருள் பொதிந்ததுமாகும்.
தயவு