வள்ளலார்
ஒருவன் பிரார்த்தனை செய்வதில், அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல . இந்த உலகம் எல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்குகின்றன!.
வள்ளலார்
சத்திய ஞானசபை
உலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது, சாதி, மதம், இனம், மொழி, தேசம் என வேறுபாடுகளைக் கடந்து, அனைவதும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது.
எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார். மையத்தில் நான்கு தூண்களைக்கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில்தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார். பன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிரகாரமும், பக்தர்கள் உண்ட்கார்ந்து ஆண்டவனைத் தியானிக்க வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றன.
ஜோதி தரிசனம்
ஞானசபையில், 1872-ம் ஆண்டு ஜனவரி இருபத்தைந்தாம் தேதி தைப்பூச நாளில் முதல் தடவையாக வழிபாடு தொடங்கப்பெற்று, சோதி தரிசனத்தை அனைவரும் கண்டுகளித்தனர், அது முதற்கொண்டு ஒவ்வொரு தைப்பூசத்திலும் முழுமையான தரிசனம் நடக்கிறது.
பெளர்ணமி முழு நிலவும், பூச நட்சத்திரமும் ஒன்றுசேரும் நாள்தான் தைப்பூச நாள், அந்த நாளில் நம் ஆன்ம சக்தியும், ஆழ்மனமும் உயர்நிலையை அடைகின்றன. அருட்பெருஞ்ஜோதி தரிசன அனுபவத்தை அந்த நாளீல் பெறுவது உகந்ததாக இருக்கும் என்பதுதான் இந்த நாளை வள்ளலார் தேர்ந்தெடுக்கக் காரணம்.
தைப்பூச நாளில் காலை 6.30, 10.00 மதியம் 1.00, இரவு 7.00, 10.00 மறுநாள் அதிகாலை 5.30மணி ஆகிய ஆறுகாலங்கழ்ளில் சோதி தரிசனம் நடைபெறுகிறது.
தவிர, இருபத்தேழு நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதாந்திர பூச நாளில், இரவு எட்டு மணி முதல் எட்டரை வரை ஆறு திரைகளை விலக்கி, மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
Write a comment