பசிப்பிணி போக்குவதில் வள்ளலாரின் சீர்திருத்தம்
பசிப்பிணி போக்குவது போக்கிக் கொள்வது சமுதாயத்தில் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கவேண்டும். மக்களை உணவு கொடுத்துச் சோம்பேறிகளாக ஆக்கக் கூடாது. அனைவரும் உழைக்க வேண்டும் தேவைக்கு அதிகமாக உள்ளதை வாழ்வில் பசியால் வாடும் ஏழை எளிய மக்கட்குப் பகிர்ந்து உண்ண அவர்களாகவே முன்வர வேண்டும் என்பது அடிகளாரின் பெருவிருப்பம்.
எனவே பொன், பொருள் மீது பற்று வைக்காத அவ் வெள்ளாடைத் துறவி மக்களிடமே தருமச் சாலைக்கு வேண்டிய பொருள்களைப் பெற விரும்பினார். வள்ளலாரின் இவ்வுயரிய நோக்கத்திற்கு உதவும் வகையில் மக்கள் 80 காணி நிலத்தைக் கொடுக்க முன்வந்தனர் கட்டடம் கட்ட வேண்டிய மரச் சாமான்களையும் கொடுத்துதவினர். தானியக் கிடங்குகளில் தாமே தனியங்களைக் கொண்டு வந்து நிரப்பினர். இச்செயல் இன்றும் மக்களால் கடைப்பிடிக்கப்படுவதால் அன்று மூட்டிய அறச்சாலை அடுப்பு இன்றும் அணையாமல் செயல்படுவதனைக் காணலாம்.
இப்பசிப்பிணி இவ்வுலகில் நிலவுவதற்கு அரசோ, மேல் சாதியினரோ காரணமல்லர். சமுதாயத்தில் உள்ள மக்களூம் இன்னொரு காரணமாவர். சில சமயங்களில் பொருள் படைத்தோர் ஆடம்பரமாகச் செலவு செய்வர் வள்ளலார் இத்தகையவர்களைப் பார்த்துத் தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனம் செய்து ஏழைகளின் பசியை நீக்குதல் வேண்டும் என்கின்றார்.
இறை வழிபாட்டிற்காக மக்கள் காலந்தோறும் வீண் ஆடம்பரச் செலவுகள் செய்வதை வள்ளலார் ஒரு போதும் விரும்பவில்லை. இறைவன் பொருட்டுச் செலவு அப்பணத்தைப் பசித்த ஏழைகட்குச் செலவு செய்வதையே பெரிதும் விரும்பினார். இதைத் தேங்காய் உடைக்க உங்களுக்கு விருப்பமிருந்தால் அதனை முன்னதாகவே உடைத்து அத்துடன் சர்க்கரை கற்கண்டு முதலியன கலந்து ஆண்டவனுக்கு இனிப்பாக நைவேத்யம் வைப்பது நலம். ஆண்டவரை வாயார வாழ்த்துவது தவிர அபிஷேகம், புட்ப அலங்காரம் வாகனங்களில் ஏற்றி வீதி உலா வருதல் இன்னும் இவைபோன்ற ஆடம்பரங்கள் கூடாது. கடவுளுக்க்ச் செலவு செய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அப்பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள் என்னும் கூற்றால் அறிந்து கொள்ளலாம்.
தயவு
Write a comment