Vallalar Universal Mission Trust   ramnad......
பெண்களைப்பற்றி வள்ளலார் must read everyone

மகளிரைப்பற்றி வள்ளலார் கூறுவது
 
பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேதமாய் ( அதாவது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது தத்துவம் முதலியவற்றின் சொரூப, ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால் பின் தடையின்றி நமது துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள். தெய்வம் தொழா அள் எனும் தேவர் குறளால் இதனை அறிக.
 
கர்ம காலம் முதலிய பேதங்களால் யார்க்காயினும் தேக ஆனி நேரிட்டால் தகனம் செய்யாமல் சமாதியில் வைக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கலியாணப் பிரயத்தனம் செய்ய வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். தெரிவிக்கத் தக்கவர்க்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்க்கு நேரிட்டமட்டில் அன்ன விரயம் செய்ய வேண்டும்.
 
கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறி மனைவியும் உயிர் துறக்கும் பழக்கத்தினை வடநாட்டில் ராஜா ராம் மோகன் ராய் ஒழித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு அமங்கலக் கோலமே கூடாது என்றும் மங்களகரமாகவே இருக்க வள்ளலார் போதித்தார். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று இருந்த கால கட்டத்தில் ஆண்களுக்குச் சமமாகப் பேதமின்றிப் பெண்களுக்கும் படிப்பு முதலியன தரவேண்டும் என்றார் வள்ளலார். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த ஒரே அருளாளர் வள்ளலார். அவருடைய சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் என்ன என்பதையும் முக்கிய லட்சியம் என்ன என்பதையும் அவர் எழுதிய விண்ணப்பத்தில் தெரிவிக்கின்றார்.
 
 
om prakash
NALLA KARUTHU!!
Monday, July 8, 2013 at 13:50 pm by om prakash