Vallalar Universal Mission Trust   ramnad......
ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது என்ன

ஜீவகாருண்யம் ஒழுக்கம்என்பதுஎன்ன?
ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல்.
ஜீவகாருண்யத்தின்வல்லபம்யாது?
பிற உயிர்களிடத்துப் பசி, கொலை, முதலியவற்றுள் எதனால் காருண்யம் தோன்றியதோ அதை நீக்குவதற்கு முயல்விப்பது அதன் வல்லபம் என்று அறியவேண்டும்.
ஜீவகாருண்யத்தின்பிரயோஜனம்யாது?
உயிர்களுக்கு இன்பம் உண்டு பண்ணுவது அதன் பிரயோசனம்
ஆன்மஉருக்கம்என்கின்ற
ஜீவகாருண்யத்திற்குஆற்றல்எவ்விடத்துஉண்டகும்?
பசி கொலை பிணி முதலிய தடைகளில் எந்தத் தடைபற்றி ஜீவகாருண்யயம் தோன்றியதோ அந்தத் தடையை நிவர்த்தி செய்விக்கின்ற இடத்துத்தான் ஜீவகாருண்யத்திற்கு ஆற்றல் இருந்ததென்று அறியவேண்டும்.