Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலாரின் சீர்திருத்தம்

சாதிசமயமதங்களில்சீர்திருத்தம்
இவ்வுலகில் மக்களிடையே இருக்கும் சாதி, சமய மதத்தவர்களைத் தகர்க்க வேண்டும். இம்மதச் சுவர்களே மக்களைப் பிரித்து வைக்கின்றன. இம்மதச் சுவர்கள் தகர்க்கப்படும் காலத்தில் மட்டுமே மக்களிடையே ஒற்றுமை மலரும் உலகம் ஒரே குடும்பமாக மக்கள் அனைவரும் ஓரினமாக மாறுவர் ஆன்ம நேயம் வளரும் எங்கே ஆன்மநேயம் உள்ளதோ அங்கே அன்பும் அருளும் கருணையும் இருக்கும் அத்தகைய இதயத்திலேயே இறைவன் குடி இருப்பான் உலக மக்கள் சாதி, மதம், சமயம் காணாது ஒன்றுபட்டு வாழவேண்டும் இவைகளை மக்கள் பொய் என உணரவெண்டும். இவைகளை விட்டொழிக்க வேண்டும். இக்கருத்துக்களைக் கொண்ட செய்யுள் வரிகள்.
சாதியும் மதமுஞ் சமயமுங் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சமயமுங் குலமுதல் சார்பெலாம் விடுத்த
சமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
என்பவைகளாகும்.
இவ்வுலக மக்கள் மதம், சமயம், என்பனவற்றில் மனத்தை வைத்து வீண்பொழுது போக்குகின்றனர் இறைவனை மட்டும் நினைக்க மறந்து விடுகின்றனர். இவ்வாறு மக்கள் இறைச் சிந்தனை சிறிதுமின்றி இருக்கையில் வள்ளலார் மட்டுமே இறைவனைப் பற்றியே சதா சிந்தித்தார். இந்நிலையில் இறைவனும் அவரைத் தன்னோடு இணைத்துக் கொள்கின்றார். இறைச் சிந்தனை உள்ளவர்கட்கு இறையருள் கிட்டும் என்பதனை.
மதத்திலேயே சமய வழக்கிலே மாயை மருட்டிலே
இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது
கழிக்கின்றார்
கழிக்கா நானுன் பூமி பத்திலே
மனத்தை வைத்தன்
னீயும் பரிந்தெனைப் பழியிலா நல்ல
பத்திலே வைத்தாயெனக்கிது போதும்
புண்ணிய
தவம் பலித்ததுவே.
எனக் குறிப்பிட்டுள்ளார்.