அருள்பாவலர் சக்திவேல் .வே
தர்மச்சாலையின் தர்மப் பணிகள்....
வடலூர் சத்திய தர்மச்சாலை 1867-ஆம் ஆண்டு வைகாசி 11-ஆம் நாள் வள்ளல் பெருமனாரால் தொடங்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை 151 ஆண்டுகளாய் தொடர்ந்து ஆதரவில்லாத ஏழைகளுக்கு மூன்று வேளை உணவை வழங்கி வருகின்றது...

வள்ளல் பெருமனார் காலகட்டத்தில் பல்வேறு அற்புதங்களும் - ஆச்சரியங்களும் இங்கு நிகழ்தன ... அவற்றுள் ஒரு நிகழ்வு வருமாறு...

தர்மச்சாலையில் ஒரு நாள் இரவு உணவு நேரத்தில் பலர் வந்துவிட்டனர்

சமைத்த உணவு சிறிதே உள்ளதென்றும் ,அனைவருக்கும் பரிமாற உணவு போதாதென்று தர்மச்சாலை நிர்வாகத்தைக் கவனித்து வந்த சண்முகம் என்பவர் வள்ளல் பெருமனாரிடம் கூறினார்.

வள்ளலார் உடனே எழுந்து நின்று "பிச்" என்று கூறினார்.

சற்று அமைதியாய் வள்ளல் பெருமனார் தியானம் செய்தார்கள்.

வள்ளலார் தம் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார்கள்.

வந்திருந்த அனைவரும் வயிறாற உண்ட பின் பாத்திரத்தில் உணவு எஞ்சி இருந்தது.

சண்முகம் ஆச்சரியத்தில் வியந்து நின்றார்.

பழந்தமிழ் இலக்கியமான மணிமேகலை நூலினுள் வரும் அமுதசுரபி , சண்முகத்தின் நினைவிற்கு வந்தது.

★>>ஆம்>>151 ஆண்டகளாய் வடலூர் தர்மச்சாலை இடைவிடாது - தடைபடாது உணவை வழங்குகின்றது என்றால்...... அதன் பின் வள்ளல் பெருமனாரின் தவ வலிமை உள்ளது .... என்பதில் எவ்வித ஐயமும் இல்லை....

(வடலூர் தர்மச்சாலை 151 - ஆம் ஆண்டு விழா.....சிறப்புப் பதிவு..... ( 4 )..... ஆக்கம் ...அருள்பாவலர் )