Sathiyadeepam Sivaguru
ஜீவகாருண்ய ஒழுக்கம் (1867 - 2017)
அற்றார் அழிபசி தீர்த்தலையும் புலால் மறுத்தலையும் வற்புறுத்தி ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலைப் பெருமான் எழுதியருளினார். தருமச்சாலை தொடங்குவதற்கு முன்னரே பெருமான் இந்நூலை எழுதத்தொடங்கினார்.(19-04-1866) இறுக்கம் இரத்தினம் அவர்களுக்கு வரைந்த திருமுகத்தில் குடும்பகோடம், பொதுவேதம், மெய்ம்மொழிப் பொருள் விளக்கம், சன்மார்க்க விளக்கம் என்பவைகளை நூதனமாக ஏற்படுத்தக் கருதியபடி வரையாக் கடிதப் புத்தகம் மூன்றென்னிடத் திருக்கின்றன. அவை அமையும். ஆகலில் அது விடயத்தில் உழத்தல் வேண்டா எனப் பெருமான் குறித்துள்ளனர், சீவகாருண்ய ஒழுக்கத்தின் தலைப்பு சன்மார்க்க விளக்கத்தின் முதற்பிரிவாகிய சீவகாருண்ய ஒழுக்கம் எனக் காணப்படுகிறது. எனவே சீவகாருண்ய ஓழுக்கம் 1866க்கு முன்னரே எழுதத் தொடங்கப்பெற்றதென்பது மேற்செய்திகளால் அறியப்படுகிறது. சீவகாருண்ய ஒழுக்கததின் முதற்பதிப்பு பெருமான் சித்திபெற்ற ஐந்தாண்டுகளுக்குப்பின்தான் 1879ல் புதுச்சேரியில் பு.பெ.கிருஷ்ணசாமி அவர்களால் அச்சிடப்பெற்றது. ஆனால் பெருமானார் தருமச்சாலை தொடக்கநாள் விழா அன்றே ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாசிக்க செய்து அதன் மகத்துவத்தை உணர்த்தினார். பலரது வேண்டுகோளுக்குப் பிறகுதான் திருஅருட்பாவை வெளியிட இசைந்தார் நமது பெருமானார். ஆனால், வள்ளற்பெருமானாரே தானே முன்வந்து வெளிப்படுத்தியது ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகும். பசித்த உயிர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குதல், உயிர்க்கொலையை எவ்வித தந்திரத்திலாவது தடைசெய்தல், ஆகிய இரண்டு கொள்கைகளை முதன்மையாகக் கொண்டே இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று வள்ளலாரால் எழுப்பப்பட்ட முதல் திருக்கோயிலே சத்தியதருமச்சாலை. அங்கு வாசிக்கப்பட்ட முதல் சன்மார்க்க மாமறையே ஜீவகாருண்ய ஒழுக்கம். திருஅருட்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்டு தருமச்சாலை தொடக்க நாள் விழாவில் வாசிக்கப்பட்டு அனைவருக்கும் உணர்த்தப்பட்டது இந்த வழிபாட்டு முறை. வள்ளலார் இவ்விரண்டையும் நமக்கு அருளிய 150ஆவது ஆண்டு இது.
இந்த 150ஆவது ஆண்டில், பூசதினமும் (23.10.2016) சன்மார்க்கக் கொடிகட்டிய தினமும் (ஐப்பசி 7) சேர்ந்த நன்னாளில் சத்தியதீபம் சன்மார்க்கப் பதிப்பகத்தின் சார்பாக ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலினை அடிப்படியாக கொண்டு 2017 ஆம் ஆண்டு காலண்டர் இன்று (23.10.2016) வெளியிடப்படுகின்றது.

அன்பர்கள் பெற்று பயனடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

sathiyadeepam calendar1.jpg

sathiyadeepam calendar1.jpg

sathiyadeepam calendar2.jpg

sathiyadeepam calendar2.jpg