T.M.R.
வடலூர் சத்திய தருமசாலை

அன்புடையீர்,

வடலூர் தருமசாலையில், சன்மார்க்க அன்பர்கள் தானமாக அளிக்கும் சிறந்தரக அரிசி வகைகளை சமைக்காமல் அதற்கு பதிலாக ரேசன் அரிசியை சமைத்து அன்னதானம் வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதை, இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தினமலர் நாளேடு மூலம் நாம் அறிகின்றோம். உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வின் முடிவில் வள்ளலாரின் தருமச்சாலைக்கு இரண்டு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், ஒன்று: அங்கு அழுகிய காய்கறிகளை பயன்படுத்துவதாக தெரியவருகின்றது. மற்றொன்று: உணவு பறிமாறும் இடம் தூய்மையாக இல்லை, என்பதே.

சத்திய தருமசாலையிலும் ஊழல் நடைபெறுகிறது என்றால், அதற்கான நபர்களை கண்டுபிடித்து அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும். நேர்மையானவர்களையும், வள்ளலார் வாக்கினை கடைபிடிப்போர்களையும், அக இனத்தார்களை மட்டுமே வடலூர் பணிக்கு அரசு நியமிக்க வேண்டும். அல்லது உடனே சன்மார்க்கிகளின் கையில் வடலூர் வளாகத்தை ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும்.

Vadalore Food.jpg

Vadalore Food.jpg

2 Comments
Daeiou  Daeiou.
ஏழை எளிய மக்களின் பசித்துயர் போக்க அணையா அடுப்பு ஏற்றி வைத்து, சத்திய தருமச்சாலையில், சிறந்த முறையில் ஏழை எளியோர் மற்றும், வடலூருக்கு வருகை தரும் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என வள்ளற் பெருமான் விரும்பியே இந்த அமைப்பினை ஏற்படுத்தினார்.

அங்கும், ரேஷன் அரிசி பயன்படுத்தப்படுகின்றது....அழுகிய காய்கறிகள் பயன்படுத்தப் படுகின்றன என்று பத்திரிக்கைகள் வாயிலாகச் செய்தி வெளியாகின்றது என்றால்....இது எவ்வளவு பெரிய மோசடி வேலை.

சிவன் சொத்து குல நாசம் என அந்தக் காலத்தில் சும்மாவா சொல்லி வைத்தார்கள். இதற்குத் துணை போகும், இந்த நிர்வாகிகளை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், சும்மாவே விடமாட்டார்.
Friday, September 4, 2015 at 07:14 am by Daeiou Daeiou.
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
பாவிகள் எல்லாக் காலத்தும் பரவி இருப்பது கண்கூடு.
அப்-பாவிகள் அப்பாவிகள் வயிற்றில் அடிப்பது அனுமதிக்க முடியாத அறக்கேடு.
வள்ளல் பெருமானின் கருணைக்கு ஒரு வரைபடமாய் இருப்பது
சாலை.அங்கே சுத்தமில்லை என்பதும்,நேர்மையில்லை என்பதும் நெஞ்சைப்பிளக்கும் செய்தி.சட்டத்தின் கரங்கள் நீளவேண்டும்.அல்லது சன்மார்க்கிகள் குரல்கள் மெல்லென இல்லாமல் இடியென எழவேண்டும்.சுயநலப்பேர்வழிகள் சூல்கொண்டு விடாமல் தருமச்சாலையை மேல்கொண்டு செல்வது சன்மார்க்கிகளின் தனிக்கடமை.ஆகவே...அங்கங்கும் கிளம்பட்டும் ஆவேசக் குரல்கள்.கனலாகப் பாயட்டும் கண்டனக் கணைகள்!
Monday, September 7, 2015 at 17:20 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்