PURE POLITICAL PARTY
2016-சட்டசபை தேர்தலில் நாமும் போட்டியிடுவோம்.
2016-சட்டசபை தேர்தலில் நாமும் போட்டியிடுவோம்.

கட்சியின் பெயர்: சுத்த அரசியல் இயக்கம் (PURE POLITICAL PARTY)
கொள்கை: திருவள்ளுவர் மற்றும் வள்ளலார் வாழ்வியல் நெறி.

சுத்த அரசியல் இயக்க சுய ஒழுக்கங்கள்:

1. அனைத்து மக்களிடமும் இரக்கத்துடன் பணியாற்றுவது.
2. தேர்தலில் போட்டியிட 50% மகளிருக்கு வாய்ப்பு தருவது.
3. தேர்தல் செலவினங்களை முடிந்தமட்டில் சிக்கனப்படுத்துதல்.
4. மக்களைத் திரட்டி மேடைபேச்சு/பொதுக்கூட்டம்/மாநாடு நடத்தும் வழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல்.
5. தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள், செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் மூலம் மட்டுமே பிரச்சாரங்கள் மேற்கொள்வது.
6. அமைச்சர்கள் பயன்படுத்தும் அரசு வாகனத்தில் உள்ள சுழல் விளக்குகள் அகற்றப்படும்.
7. இலஞ்சம்/கமிஷன்/அன்பளிப்பு போன்றவற்றை அரசியல் வாழ்க்கையில் இருந்து சுத்தமாக அகற்றுவது.
8. எவ்விதத்திலும் ஊழல் நடைபெறா வண்ணம் கவனமாக இருத்தல்.
9. வருடந்தோறும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொத்து கணக்கினை மக்களிடம் சமர்ப்பித்தல். ஏதேனும் சொத்துகள் தனது பெயரிலோ அல்லது தனது குடும்பத்தார் பெயரிலோ புதியதாக வாங்கியிருப்பின் அதற்கான வரவினங்களின் வழியினை மக்களிடம் சமர்பிக்க வேண்டும்.
10. சட்ட சபையில் வெளிநடப்பு செய்யும் உரிமை பறிப்பு.
11. சட்டசபை நடக்கும் நாட்களில் தவறாமல் முழு நேரமும் கலந்துக்கொள்ளுதல்.
12. எதிர்கட்சிகள் கூறும் உண்மையினை ஆராய்ந்து, தவறு செய்திருப்பின் திருத்திக்கொள்ளுதல்.
13. கட்சி கொடிகள் சொந்தக்கட்டட வளாகத்தில் மட்டுமே பறக்கும். பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இருக்காது.
14. அரசு விழா, கட்சி விழா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளும் எந்தஒரு நிகழ்ச்சியிலும் பேனர்/கட்அவுட் விளம்பரங்கங்கள் முற்றிலும் தடைசெய்யப்படும்.
15. அரசு செயல்படுத்தும் திட்டங்களில் முதலமைச்சர் பெயரோ அல்லது வேறு தலைவர்களின் பெயரோ இடம்பெறாது. தமிழ்நாடு அரசின் பெயரில் மட்டுமே திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
16. மக்கள் பிரதிநிதியாகப் போட்டியிடுபவர் மாமிசம், மது, புகை இவை மூன்றையும் தவிர்த்தவராக இருப்பர்.
17. மக்கள் விரும்பும் வண்ணம் எளிமையையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்தல்.
18. அரசு விழாக்களில் மாமிச உணவு முற்றிலும் தவிர்க்கப்படும்.

சுத்த அரசியல் இயக்க திட்டங்கள்:

1. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல் படுத்தப்படும்.
2. அரசின் இலவசத்திட்டங்கள் முற்றிலும் நிறுத்தப்படும்.
3. கிராம முன்னேற்றம், விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. மணல், கிரானைட் மற்றும் தாது பொருள்களின் விற்பணையை அரசே மேற்கொள்ளும்.
5. தமிழ்நாடு அரசின் தலைமை செயலகம் கடலூரில் அமைக்கப்படும். கடலூர் தமிழ்நாட்டின் தலைநகராக அறிவிக்கப்படும்.
6. தமிழக சட்டமன்ற மேலவை மீண்டும் அமைக்கப்படும்.

7. பள்ளி, கல்லூரி மற்ற அரசு சான்றிதழ்களில் ஜாதிப் பெயர் இடம்பெறுவதை தவிர்க்க திட்டமிட்டு செயல்படுத்தப்படும். மதங்களை மட்டுமே குறிக்க வகைபடுத்தப்படும்.
8. அரசு அலுவலங்கள் யாவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் பணியினை முடிக்க வழிவகை செய்யப்படும்.
9. அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவதையோ, பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதும் கடுமையாக கண்காணித்து அவை உரிய முறையில் தடுக்கப்படும்.
10, அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும், மக்களின் குறைபாடுகளை அரசிற்கு தெரிவிக்கவும் மாநில அரசே ஒரு தொலைக்காட்சி சேனலை துவக்கும்.
11. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் யாவும் சரியான எடையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வழங்கப்படும்.
12. பல்வேறு அரசுத்துறை காலி பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
13. சிறு, குறு, பெரு தொழிற்சாலைகளையும், வெளிநாட்டு முதலீட்டினையும் பெருக்கி வேலைவாய்ப்பிற்கு வழி செய்யப்படும்.
14. மின்சார பற்றாக்குறையை எவ்வகையிலேனும் தீர்த்து மின்மிகை மாநிலமாக மாற்றப்படும்.
15. கிராமங்களில் நடைபெறும் பள்ளிக்கூடங்களின் வசதியினையும் கல்வி தரத்தினையும் உயர்த்த ஆவண செய்யப்படும்.
16. அரசு மருத்துவ மனைகளில் சுத்தம் சுகாதாரத்துடன் மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்க வழிவகை செய்யப்படும்.
17. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் முழு மது விலக்கு கொண்டு வரப்படும்.

மேற்குறிப்பிட்ட சுய ஒழுக்கத்திற்கும் அரசு திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு சுத்த அரசியல் காண தங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

சுய லாப நோக்குடன் அரசியலில் வர நினைப்பவர் தவிர்க்கவும். சுத்த சேவை ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்கள் எங்களை கீழ்காணும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். முதலில், புதுச்சேரி உட்பட 33 மாவட்ட அளவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இக்கூட்டம் கடலூரில் நடைபெறும். கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

தங்களுடைய பெயர், முகவரி, கைப்பேசி எண் மட்டும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும். நன்றி.

purepolitical@gmail.com

https://drive.google.com/file/d/0B_bReCJNSsUWNkt1WnM0YzlrcWc/view?usp=sharing

3 Comments
ram govi
It's an opportunity to integrate all social workers and San margis under one umbrella.Animal welfare, pollution control, green house gas control, water resources (river, lake, pond, stream etc.,) protection etc., can be added to agenda.Great thought and Effort on incubating this pure political entry idea through Her/His Grace, let us broad cast message through aruljothi TV, create Facebook fan page, twitter account etc.,
Saturday, February 28, 2015 at 15:18 pm by ram govi
Eight Can Do
சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள்தான் சுத்த அரசியலையும் நடத்த முடியும். இந்த முயற்சி வெற்றிபெற எமது வாழ்த்துகள். நிச்சயமாக எனது பங்கும் இந்த நற்முயற்சியில் இருக்கும். சன்மார்க்கிகள் இந்த இயக்கத்தில் தவறாது இணைய வேண்டும். இச்செய்தியினை முதன்முதலில் தெரிவித்த "வள்ளலார் ஸ்பேஷ்" இணையத் தளத்தார்க்கு நன்றிகள் பல.
Tuesday, March 3, 2015 at 15:19 pm by Eight Can Do
TMR RAMALINGAM
சுத்த அரசியல் இயக்கத்தில் இணைய யானும் இசைந்து, இச்செய்தியினை எமது வலைப்பூவிலும் விளம்பரம் கொடுத்துவிட்டேன்.
Thursday, March 5, 2015 at 15:34 pm by TMR RAMALINGAM