Taejha Singh
Sanmaarga Marriage
Arutperumchothi Thaniperumkarunai !
Dear All,
Greetings of Love and Peace in the most Sweetest name of Our Great Guru Vallal Perumaan.
My Post here is about tying of the thaali or mangalanaan in marriages. These days it is seen as an act of male chauvinism by many people. Our Guru Himself has said that distinguishing and being biased based on caste, religion, race, "gender" should be totally abhored and avoided. 
Should thaali have a place in Sanmaarga Marriages ?

Humble servant of His Grace,
Teja !

Arutperumchothi Thaniperumkarunai !
Daeiou  Daeiou.
இந்த மண்ணுடன் ஒன்றிக் கலந்த ஒரு பழக்கம், திருமணத்தின் போது, மங்கல நாண் பூணுவது என்ற ஒன்று. காலங்காலமாக அது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

பெருமான் அவர்கள் சொல்கின்றபோது, கணவன் இறந்தால், மனைவியிடம் தாலியை வாங்க வேண்டாம் என்கின்றார். ஒரு வகையில் அவர்களே ஒத்துக்கொண்ட ஒரு வழக்கம் இதுவாகும்.

ஒரு சிறு நிகழ்ச்சி.

பாடிய நல்லூர் என்ற (சென்னை புழலேரியினை ஒட்டிய) ஒரு ஊரில், சன்மார்க்க சங்கம் நெடுங்காலமாக இயங்கி வருகின்றது. தினந்தோறும், அன்ன வினியோகம் பலருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அலுவர் சார் குழுவில் மூத்தோர்கள் கோலோச்சி வந்த காலம் வரையில், கணவன் இறந்த பின் தாலியைக் கழற்றும்படி, சன்மார்க்கக் குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் வற்புறுத்தப்பட்டனர்.

ஒரு கால கட்டத்துக்குப்பின், இளைஞர் சமுதாயத்தின் பிடியில், அந்த சன்மார்க்க சங்கம் வரப்பெற்றது. அவர்கள், பெருமான் சொன்ன நெறியில் தீவிரமாக இருந்தனர்.

அவர்கள் காலத்தில், ஒருவர் இறந்தபோது, ஊர்ப்பெரியவர்கள், பண்டைய கால வழக்கப்படி, இறந்தவரின் மனைவியிடமிருந்து தாலியை வாங்கியாக வேண்டும் என வற்புறுத்தினர். ஆனால், புதிதாகப் பொறுப்பேற்ற சன்மார்க்க இளைஞர் அலுவல் சார் குழு, அதனை ஏற்கவில்லை. மாறாக, இறந்தவரின் மனைவியிடமிருந்து தாலியை வாங்க வேண்டாம் என தீர்க்கமாகக் கூறி விட்டனர். ஊர்ப்பெரியவர்கள், எவ்வளவோ எதிர்த்தும், இறந்தவரின் மனைவியிடமிருந்து தாலி வாங்கப்படவில்லை. இறந்தவரை பெருமான் சொன்ன நெறிகளின்படி புதைத்தனர்.

இறந்தவரின் மனைவி, சன்மார்க்க இளைஞர்களிடம் வந்து, இந்த மங்கல நாண் என் கழுத்தில் இருப்பது, என் கணவரே என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது. நல்லது செய்தீர்களப்பா...என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

இந்தத் தகவல், அந்த பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கத்தில் ஜெகநாதன் என்ற பொருளாளர் மூலம் அறியப்பட்டது.

=0=0=0=0=0

இது ஒரு வகை.

வெளிநாடுகளில் எடுத்துக் கொண்டோமானால், அமெரிக்கா, பாரிஸ் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, சுவீடன் போன்ற மேற்கத்திய நாடுகளில் தாலி கட்டுவது என்ற கலாசாரமே இல்லை. மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். அங்கெல்லாம், Living together..என்ற பழக்கம்தான் உள்ளது.

இன்றளவும், சன்மார்க்கத் திருமணங்களை நடத்தி வைக்கும் சன்மார்க்கப் பெரியோர்களும், மங்கல நாண் பூணுவதை, தவிர்க்கச் சொல்வதில்லை.
Friday, November 21, 2014 at 12:38 pm by Daeiou Daeiou.