T.M.R.
ச.மு.க. - 190-வது குருபூஜை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்!

திருஅருட்பிரகாசரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் 90-வது குருபூஜை விழா வருகின்ற 28-11-2014-ஆம் தேதி காரணப்பட்டில் அமைந்துள்ள "ச.மு.க. அருள் நிலையத்தில்" நடைபெற உள்ளது. அவ்வமயம் கொடி ஏற்றுதல், அகவல் பாராயணம், சன்மார்க்க சொற்பொழிவுகள், ஜோதி வழிபாடு, வள்ளலாரின் பாதக்குரடு ஆராதனை, அன்னதான நிகழ்ச்சிகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நல்லாசியுடன் நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு சன்மார்க்க அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

பேருந்து நேரம்:

கடலூர் TO காரணப்பட்டு காரணப்பட்டு TO கடலூர்

பேருந்து எண்: 20
காலை 06.45 மணி காலை 05.30 மணி
மதியம் 01.45 மணி காலை 07.45 மணி
மாலை 06.45 மணி மதியம் 3.15 மணி
இரவு 09.45 மணி இரவு 08.15 மணி

கடலூர் TO தென்னம்பாக்கம் தென்னம்பாக்கம் TO கடலூர்
(தென்னம்பாக்கம் TO காரணப்பட்டு 1/2 கி.மீ தூரம்)
பேருந்து எண்: 19
காலை 06.15 மணி காலை 05.30 மணி
காலை 03.10 மணி காலை 07.30 மணி
இரவு 09.30 மணி மாலை 04.15 மணி

மேலும் விவரங்களுக்கு 9445545475 என்கின்ற கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளவும். நன்றி.

TMR14.JPG

TMR14.JPG

6 Comments
Anandha Barathi
Dear Ayya,

I am waiting for SA.MU.Ka Prabanda Thirattu book, please let us know the how can we get the book

Thanks.
Friday, November 21, 2014 at 05:15 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
காரணப்பட்டு பஜனை திரு ச.மு. கந்தசாமி ஐயா அவர்கள் பதிப்பித்த திரு அருட்பா (6 திருமுறைகளுடன் உரைநடைப்பகுதியும் சேர்ந்தது) சென்னை வளசரவாக்கம் சன்மார்க்க அன்பர் திரு எம்.ஏ.வெங்கட் அவர்கள் மூலம், மறு அச்சு செய்யப்பட்டு, தற்போது பல நாடுகளுக்கும் அனுப்பப் பட்டு வருகின்றது. அதற்கு மூல காரணமாய் இருந்த ஐயா அவர்களின் விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் உரித்தாகுக.
Friday, November 21, 2014 at 13:25 pm by Daeiou Daeiou.
TMR RAMALINGAM
Respected Sir,

1.That book has been under processing. We are unable to publish on time, due to some printing related work is going on in press. Anyway we have try to publish with in the year.

2.Thank you for your Daeiou Team wishing.
Saturday, November 22, 2014 at 17:43 pm by TMR RAMALINGAM
Anandha Barathi
Dear Ayya,

Thanks for your replay.
Monday, November 24, 2014 at 12:02 pm by Anandha Barathi
Daeiou  Daeiou.
காரணப்பட்டு செல்பவர்கள், அருகில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கம்பளிக்காரன் குப்பம் கிராமத்துக்கும் தவறாமல் சென்று வரலாம். (செல்லும் வழியில்தான் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.) காரணம், இந்த கிராமத்தில் அனைவருமே சைவம் சார்ந்தவர்கள். திரு சித்திர முத்து என்ற அடிகள், இக் கிராமத்தில் 25 வருடங்களுக்கும் மேலாகத் தங்கி, தவ வாழ்க்கை மேற்கொண்டு, ஞானம் பெற்றார் என்பது வரலாறு. அங்கு அற்புதமான ஒரு மடம் உள்ளது.
Monday, November 24, 2014 at 14:04 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
காரணப்பட்டு விழாவிற்குச் செல்லும் அன்பர்கள், அங்கு நடைபெற்ற விசேடங்கள் குறித்து, ஏனைய அன்பர்கள் தெரிந்து கொள்வதற்காக, இந்த இணைய தளத்தில், விபரம் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை.
Wednesday, November 26, 2014 at 13:27 pm by Daeiou Daeiou.