V Baskar
வள்ளலார் ஜீவகாருண்ய சர்வீஸ்: ஒரு புதிய முயற்சி
வள்ளலார் ஜீவகாருண்ய சர்வீஸ்: ஒரு புதிய முயற்சி

அக்டோபர் 18-ம் நாள் வள்ளலார் ஜீவகாருண்ய சர்வீஸ் என்ற ஒரு புதிய பிளாக் ஸ்பாட் (ஒரு இணைய தளம்) ஆரம்பிக்கப்பட்டது. இதனுடைய நோக்கம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளையெல்லாம் திரட்டி கல்லூரி மாணவர்களுக்கும் வேலைதேடிக்கொண்டிருக்கும் இளைய சமுதாயத்திற்கும் அளித்திடுவதேயாகும். ஒரு நபர் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் கவலையின்றி சுபிட்சமாக வாழலாம் என்பதால் இந்த சேவை ஒரு ஜீவகாருண்ய பணியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் நமது இணையத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது. இச்சேவை ஆரம்பித்து 11 நாட்கள் ஆன நிலையில் மொத்தம் 366 பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். சராசரியாக 33 பேர் மட்டுமே ஒரு நாளைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

VIT, THIYAGARAJAR ENGINEERING COLLEGE, A.V.C. ENGINEERING COLLEGE, NEW INDIA ASSURANCE (2), TNPSC, FEDERAL BANK SCHOLARSHIP போன்ற தகவல்கள் இருப்பதனால் நமது இணையத்தை பயன்படுத்துபவர்கள் vallalarjeevakarunyaservice.blogspot.in என்ற இணையத்தைப் பற்றி தமக்கு தெரிந்தவர்களிடம் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இச்சேவை முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இன்டர்நெட் அட்ரஸ்பாரில்    vallalarjeevakarunyaservice.blogspot.in       என்ற முகவரியை அடித்து enter செய்தால் இவ்வணையத்தை பார்க்கலாம். மேலும் இந்த பிளாக்ஸ்பாடினை பற்றிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

குறிப்பு: மேலும் இந்த இணையத்தில் நமது வள்ளல்பெருமானின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளும் பதிவு செய்யப்பட்டு இக்கருத்துக்கள் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆன்மீக கல்வியினையும் அளிக்கிறது.
images (1).jpg

images (1).jpg

4 Comments
Daeiou  Daeiou.
நல்ல ஒரு செய்தி. இதனை சன்மார்க்க அன்பர்களும், ஏனையோரும் பயன்படுத்தி, தங்களது வாரிசுகளுக்கு, வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த பிளாக் ஸ்பாட், வேலை வாய்ப்புத் தேடி அலைவோருக்கு ஒரு வர்ப்பிரசாதமாகும்.
Wednesday, October 29, 2014 at 13:53 pm by Daeiou Daeiou.
karthikeyan rengaiyan
It is really a commendable service rendered by Sri.V.Baskar to light a lamb by showing the desirable path through his blocs to the unemployed and under employed.It is fond hope that if every one of the mighty person starts such type of services, there will be no any kind of social an d economic threats in the society. All living beings will live peacefully. He deserves for appreciation. R. Karthikeyan, AVC College.
Friday, October 31, 2014 at 09:45 am by karthikeyan rengaiyan
TMR RAMALINGAM
"வள்ளலார் ஜீவகாருண்ய சர்வீஸ்" என்கிற வலைப்பூ மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை சுட்டிக்காட்டும் மிகச் சிறப்பான சேவையாக இவ்வலைப்பூ அமைந்துள்ளது. மேலும் வள்ளலாரின் போதனைகளும் இவ்வலைப்பூவில் காணக்கிடைப்பதனால், இளைஞர்கள் வேலைவாய்ப்புடன் நல்ல ஒழுக்கங்களையும் ஒருங்கே பெறக்கூடிய வலைப்பூவாக இது அமைந்துள்ளது. வலைப்பூ ஆசிரியருக்கு நன்றி.
Friday, October 31, 2014 at 15:15 pm by TMR RAMALINGAM
karuneegar umapathy
this is best service.. My duty to spread this web site among my groups. I will do.
Wednesday, November 5, 2014 at 00:39 am by karuneegar umapathy