Badhey Venkatesh
நரசிம்மாவதாரம் - சன்மார்க்க விளக்கம்
நரசிம்மாவதாரம்


"தான் " " தான்"

என்று அகங்கரிக்கின்ற ஜீவபோதமே

" இரணியன் " என்று உருவகித்தனர்


இந்த தற்போதம்  அழிகின்ற இடம் சுழிமுனை

அது - இரவு பகலற்ற இடமாயும்

உள்ளும் வெளியுமில்லாமலும்

ஆண் பெண் தன்மையற்றது என்பதினாலும்


இரணியனை

இரவு பகலற்ற் " சந்தி " வேளையிலும்

உள்ளும் வெளியுமில்லாத " வாசலில் " வைத்தும்

நரனும் மிருகமுமற்றதாகிய நரசிம்மரால் அழித்ததாகச் சித்தரித்தனர்






வெங்கடேஷ்
5 Comments
Badhey Venkatesh
இந்த சுழிமுனை அனுபவத்தைத் தான், தான் " ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியுமல்ல " என்று ஒரு பாட்டில் கூறுகின்றார் வள்ளலார்


தன் உணர்வு சுழிமுனையில் ஏறுவதைத் தான் இவ்வாறு பாடியிருக்கின்றார்
Thursday, April 17, 2014 at 03:55 am by Badhey Venkatesh
Badhey Venkatesh
இந்த சுழிமுனை அனுபவத்தைத் தான் நாம் மதுரையில் சித்திரைத் திருவிழாவில் , வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது என்று கொண்டாடுகின்றோம் - வருடந்தோறும்

வைகை ஆறு - சுழிமுனை நாடி
கள்ளழகர் - நம் உணர்வு
வெள்ளை குதிரை - அபான வாயு - வாசி

அதாவது - நம் உணர்வானது வாசி மீதேறி, சுழிமுனை நாடிக்கு வருவதையே - இந்த விழாவாகச் சித்தரித்துள்ளனர் நம் முன்னோர்கள்

நாம் வெறும் திருவிழாவாக மட்டும் கொண்டாடி வருகின்றோம் - உட்கருத்தை அறிந்து கொள்ளாமல்
Friday, April 18, 2014 at 08:39 am by Badhey Venkatesh
Badhey Venkatesh
இந்த வாசிக் குதிரையை "அகோரம் " என்றும் , இதனை சுழிமுனைக்கு கொண்டு வரும் பயிற்சி செய்பவர்களை " அகோரிகள் " என்றும் அழைக்கின்றோம்
Saturday, April 19, 2014 at 03:39 am by Badhey Venkatesh
ram govi
Good Explanation on flow of vasi which carries sensation to sushmana and finally to sympathetic nervous system which (temptations and triblations) can be ceased by perfecting kevele khumbaka (no breathe state)
Saturday, April 19, 2014 at 05:09 am by ram govi
ram govi
breathe can be easily attuned to sushmana by sitting in Yogarudha Siddhasana pose ( style of sitting of Lord Ayyappa ) and maintaining yoga mudra and if you are into years of meditation and want to know how to control it by mind and and other techniques, please send out personal message.
Saturday, April 19, 2014 at 13:08 pm by ram govi