SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம்
எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக்கு அருள் புரிந்தே 
எல்லாருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான் 
எல்லாருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம் 
எல்லாருக்கும் செய்யாமை யகது குறித்து இசை எனக்கே.

இந்தப்  பாடலில் வள்ளலார் என்ன சொல்லுகிறார்.இறைவன் நமக்கெல்லாம் வள்ளலாரைத் துணையாய் இருக்க வைத்துள்ளான் என்பதே.

நமக்கெல்லாம் துணையாய் இருக்க வைத்தால் போதுமா.அதற்குரிய ஆற்றல்கள் எல்லாம் 
தரவேண்டும் அல்லவா .தன் அருளையும் பொருளையும் மட்டும் அல்லாது தன்னையே கொடுத்துவிட்டான்.வள்ளலார் நமக்கெல்லாம் துணையாய் இருக்கின்றார் என்பதற்கு என்ன ஆதாரம்.அவரவர் அனுபவித்தால்தானே தெரியும்.நான் அவரை அனுபவிக்கிறேன். 
இங்கே ஓரனுபவம்; 
நாங்கள் சென்னையில் இருந்து தைப்பூசம் காணப் பாதயாத்திரையாக வடலூர் வருவது வழக்கம்.20001ம் ஆண்டு.  நாங்கள் புறப்படுவதற்கு முதல் நாள்.அடுத்த மூன்று நாட்கள்
சென்னையில் மிகக் கனத்த மழைபொழியும்  இது  வானிலை  அறிக்கை.என்னுடன் பனி செய்து கொண்டிருந்தவர்கள் என்ன சார் குடை பிடித்துக்கொண்டு பாத யாத்திரையா என்று கிண்டலாகப் பேசினார்கள்.அதேபோல் மறுநாள் நாங்கள் புறப்படும்போதும் மழை நாங்கள் கோவிலைவிட்டு வெளியே வந்தோம்.பெரு மழை சாரல் மழையாக மாறியது.அன்று இரவு தாம்பரத்தில் நாங்கள் தங்கவேண்டிய பள்ளியின் உள்ளே நுழைந்தோம்.அடுத்த வினாடியே பலமான  காறறோடு 
பெருமழை கொட்டியது.பாத யாத்திரை அவ்வளவு தானா என்று மலைத்தோம் மறு நாள் 
காலை வானிலை செய்தி  புயல் இரவோடு இரவாக ஆந்திரா சென்றுவிட்டது.எங்கள்மீது 
பெருமானார்  காட்டிய கருணை  வள்ளலாரை வணங்குவோம்.எல்லாக் காரியங்களும்
நன்றாகவே நிறை வேறும். வள்ளலாரை வணங்குவோம். 
newdesign4b_19.gif

newdesign4b_19.gif