SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ஒளிதேகம் என்றால் என்ன
30-1-1874 அன்று வள்ளலார் சித்தி வளாக அறைக்குள் நுழையுமுன் வள்ளலார் கூறியது;
"நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம்  இருக்கப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்."
வள்ளலார் அறைக்குள்ளே சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டார் சிலகாலம் கழித்து மாவட்ட ஆட்சியாளர் பார்த்து அறையில் ஒன்றும் இல்லை என்று அறிவித்தார்.அறையில் சென்ற வள்ளலார் காணப்படவில்லை.
ஒளி என்ற சொல்லுக்கு ஒளிந்துகொள்ளுதல் என்ற பொருளும் உண்டு. பிள்ளைகள் கண்ணாமூச்சி என்ற விளையாட்டு ஆடும்போது ஒருவன் கண்ணைக் கட்டிக்கொள்வான்.மற்றவர்கள் ஒளிந்துகொள்வார்கள். மற்றவர்களால் காண முடியாதவாறு  செய்துகொள்வதே ஒளிந்து கொள்ளுதல் ஆகும். .

எங்கள் குருநாதர் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் அடிக்கடி மறைந்துவிடுவதுண்டு.அந்த நேரங்களில் அவர் என்ன ஆனார் எங்கு போனார் என்று எவருக்கும் தெரியாது.இது வேலாயுத முதலியார் அடையார் பிரம்ம ஞான சங்கத்தாருக்கு அளித்த வாக்குமூலம்.

1874ம் ஆண்டுக்கு முன்பே வள்ளலார் அடிக்கடி மறைந்து போய் மீண்டும் வந்திருக்கின்றார் என்று தெரிகிறது.

1874ம் ஆண்டு வள்ளலார் காணாமல் போனார்.அன்றைய ஆங்கில அரசாங்கம் சட்டப்படி ஏழு ஆண்டுகள் கழிந்தபிறகே ஏஜெண்டுகளை நியமித்தது என்ற செய்தியும்வள்ளலார் காணாமல்ய்கிண்களுக்குத் தோன்றாமல் இருப்பதே ஒளிந்து கொள்வது. அவருடைய ஞான தேகம் பிறர் கண்களுக்குத் தோன்றாது. அவர் இருப்பார்.  அவரை மற்றவர்களால் காணமுடியாது..அவர் பெற்ற பேற்றை அவரே சொல்கிறார் பாருங்கள்.
 
மன் செய்து கொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டது நான் செய்து கொண்டேன்
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடல் ஆதியை நுமது 
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பின்னாடி காணப் பொருந்திக் கொடுத்தேன்  
என் செய்து கொண்டாலும் செய்துகொள்கிர்பீர்  எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே  960


இந்தப் பாடலில் வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்றார் வள்ளலார். வான் என்ன செய்து கொண்டது? இதற்கு விடை மகாதேவா மாலையில் கிடைக்கிறது.

 மானாகி மோகினியாய் விந்துவாகி மற்றவையால் காணாத வானமாகி 
நானாகி நனல்லனாகி நானே நானாகும் பதமாகி நாந்தான் கண்ட 
தானாகித்  தானள்ளனாகித் தானே தானாகும் பதமாகிச் சாகச ஞான 
வானாகி வான் நடுவே வயங்குகின்ற மவுன நிலையாகி எங்கும் வளரும் தேவே.     131

பஞ்ச பூத்களில் மண்,நீர்,நெருப்பு,காற்று ஆகிய நான்கையும் நம்மால் பார்க்கவம் உணரவும் முடிகிறது. ஆனால் வானம் மட்டும் தன்னை யாராலும் காண முடியாதவர் செய்துகொண்ட்தாம். அதுபோல் நானும் என்னை மற்றவர்கள் எவராலும் காணாதவாறு  செய்துகொண்டேன்  என்றார்  வள்ளலார்.

வானம் எப்படி தன்னைக்  மற்றவர்களால்கா ணாதவாறு செய்து  கொண்டதோ  அதுபோல் நானும் என்னை மாற்றார்கள் காணாதவாறு செய்துகொண்டேன் என்று வள்ளலார் கூறுகிறார். 

காற்றாலே புவியினலே க்கனமதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே  கூற்றாலே  பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிரவியற்றும் கொடும் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கம் மெ அளிக்க வேண்ட்ஜ்ம் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே  ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே  


எதனாலும் அழியாதே விழனும் உடம்பு பெற்றவர் வள்ளலார். அவர் உடம்பு மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகவில்லை. அவர் இன்றும் இருக்கின்றார் என்பதே உண்மை.



4 Comments
venkatachalapathi baskar
அற்புதமான விளக்கம். வள்ளல் பெருமான் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்று கூறிப்பிடுகிறார். ஞான தேகம் என்பதும் ஒளிதேகம் என்பதும் ஒன்றா? ஒளிதேகம் என்ற வார்த்தையினை வள்ளல் பெருமான் பயன்படுத்தி உள்ளாரா?
Tuesday, September 20, 2016 at 13:08 pm by venkatachalapathi baskar
ashok kumar saminathan
iyaa vallalar udal olimayamaaga maariulladhai, THIRUKADHAVAM THIRATHAL yendra thalaippil paadiyullar - idhanpadi oli yendra sollukku olindhukolludhal yendra porul varuma?????
Saturday, October 1, 2016 at 13:56 pm by ashok kumar saminathan
Muthukumaaraswamy Balasubramanian
கனமுடையேம் கட்டுடையேம் என்று நினைத்திங்கே
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்று வரும் செய்தி அறியீரோ
செத்த நுமது இனத்தாரைச் சிறிதும் நினையீரோ
தினகரன்போல் சாகாத தேகம் உடையவரே
திரு உடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே
வழங்குதற் கென் தனித் தந்தை வரு தருணம் இதுவே ..1480
ஒளிப்பிடம் என்றாரே என்ன பொருள் அதுவும் அடுத்த வரியில் சினமுடை கூற்று வரும் செய்தி. கூற்று வரும்போது ஒளிந்து கொள்ள என்றால் ஒளி என்ற சொல்லுக்கு பிரகாசம் என்பது மட்டும் பொருள் அல்ல ஒளிந்துகொள்ளுதல் அதாவது நினைந்து நினைந்து என்னும் ஞான சரியை முதற் பாடலில் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் என்ற பெருமானார் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே என்றார்.. பொற்சபை சிற்சபைதான் ஒளிப்பிடம்.
மற்றவர்கள் காணாதவாறு செய்துகொள்ளுதல் தான் ஒளிந்துகொள்ளுதல்.மகாதேவ மாலை மானாகி மோகினியாகி என்ற பாடலில்
மற்றவையால் காணாத வானமாகி என்று பாடியுள்ளார்.(131)
இந்தப் பாடலைப் பாருங்கள்.
மன்செய்து கொண்ட சன்மார்கத்தில் இங்கே
வான் செய்துகொண்டது நான் செய்து கொண்டேன்
முன் செய்துகொண்டதும் இங்ஙனம் கண்டீர்
மூவகையாம் உடலாதியை நுமது
பொன் செய்துகொண்ட பொதுவினில் ஆடும்
பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
என் செய்து கொண்டாலும் செய்து கொள்கிற்பீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே .....960
பஞ்ச பூதங்களில் மண்,நீர்,நெருப்பு கண்ணால் காண்கிறோம். காற்று உணர்கிறோம் .ஆனால் ஆகாயம் மட்டும் மற்றவைகளுக்குத் தன்னைக் காணாதவாறு செய்துகொண்டது. அதைப் போல் பெருமானாரும் மற்றவர்கள் காணாதவாறு தன்னைச் செய்து கொண்டார். அதுதான் ஞான தேகம். தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். அவர் இருக்கிறார். நம்மால் காண இயல முடியவில்லை. அதுதான் மற்றவர்கள் காணாதவாறு செய்தலே ஒளி தேகம்.
அதுதான் ஞான தேகம்
Monday, November 20, 2017 at 08:02 am by Muthukumaaraswamy Balasubramanian
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
May 1874 varsity vadalurar vazndhaar karanappattu Kandaswamy Ayyah bakthy mahan vallalarin pathagaly Jeeva samathikku naan selvan
Tuesday, February 13, 2018 at 18:51 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R