SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
H U M B L E REQUEST TO VALLALLAR SPACE READERS

வள்ளலார் அன்பர்களாகிய என் சகோதரர்களே உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். நான் சிறுவயதிலிருந்தே பக்தியாக வளர்க்கப்பட்டவன். ஆனால் வள்ளலாரை
எனது ௨௨ வது வயதில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. நம்மைப் போல மனிதராய்ப் பிறந்தவர் உலகமே வணங்கும் தெய்வ நிலை பெற்றதை உணர்ந்து
ஆச்சர்யப்பட்டேன். அகவலில் கடைசியில் உள்ள வரிகள் என்னை ஈர்த்தன . "உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக உத்தமனாகுக ஓங்குக என்றனை" இந்த வரிகள்தான் என்னை ஈர்த்த வரிகள். உலகத்திலே உயிர்களுக்கு வரும் இடையூறுகளை
நீ விலக்கு என்று வள்ளலாருக்கு இறைவன் ஆணை இட்டதை
"என்றனை " என்ற வார்த்தை வெளிப்படுத்து கிறது.மற்றொரு பாடலில் எனக்கு அருள் கொடுத்தஇறைவன்
எல்லோருக்கும் துணையாக இருக்கவைத்தான் என்று வள்ளலார் பாடியுள்ளார். இவற்றை நன்கு உணர்ந்து நான் வள்ளலாரிடம் சரண் அடைந்தேன். வள்ளலாரைத்தவிர
வேறு யாரையும் வணங்க வேண்டாம்.என்ற உறுதி எடுத்தேன். இதற்கு இன்னொரு சரியான காரணமும் உண்டு. அதாவது இறைவனே வள்ளலாரை நாடிவந்து
அவர் இருந்த குடிசையிலே நுழைந்தது மட்டுமல்ல வள்ளலாரின் உடம்பிலே புகுந்து அவரது உள்ளத்திலே நின்றுவிட்ட உண்மையும் ஒரு சரியான காரணமாகும்.
அதிலிருந்து நான் அனுபவிக்கும் அனுபவங்கள் ஏராளம். இப்படிப்பட்ட வள்ளலாரை புரிந்துகொள்ளாமல் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றார்களே என்றுதான்
நான் சில புத்தகங்களை எழுதினேன். இந்த வள்ளலார் space எனக்கு வழி காட்டியது. செந்தில் ஐயா அவர்கட்கும், ராமானுஜம் ஐயா அவர்கட்கும். குமரேசன் ஐயா
அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், நான் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் பல கட்டுரைகள் இதுவரை யாராலும்
வெளிப்படுத்தாதவை ஆகும். நிறைய பேர் கட்டுரைகளைப் படிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா மறுக்கின்றார்களா ஒதுக்கிவிடுகின்றார்களா என்று புரியவில்லை. வள்ளல் பெருமானார் அவர்கள் ஒத்த கருத்து உள்ளவர்களோடு மட்டும் சத் விசாரம் செய்யுங்கள் என்று வழி காட்டிஉள்ளார் என் கட்டுரைகட்கு
ஆதாரங்கள் கேட்டால் நான் தருவேன். நிறைய மக்கள் படித்தார்கள் என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தாலும் ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள
முடியவில்லை.மறுப்பவர்கள் திரு அருட்பாவிலிருந்து ஆதாரம் காட்டினால் நன்றியுடன் என்னைத் திருத்திக்கொள்வேன். தயவு செய்து comments எதுவாயினும்
தாருங்கள். இது எனது பணிவான வேண்டுகோள் நன்றி வந்தனம் முபா

5 Comments
sriprasanna88
dear sir,
Am Prasanna from madurai. nanum vallalar in bhakthar sir, intha katurai padithen.. neengal sonna vargalum ennai eirthathu sir.. nan ungaidam pesalama... pls give me a mobile no sir... thank u mupa sir.
Thursday, April 5, 2012 at 00:17 am by sriprasanna88
Sampath Venkatesan
MUPA MOBILE NO.9444450601
Tuesday, April 10, 2012 at 02:45 am by Sampath Venkatesan
Sampath Venkatesan
தங்களின் கட்டுரைகளை தவறாமல் படிப்பவன் நான். வள்ளலாரின் கருத்துக்கள் எளிமையாக புரிகிறது ஒவ்வருநாளும் ஒரு குறள் போன்று ஒரு அருட்ப விளக்குமும் எங்களுக்கு கிடைக்க வள்ளலார் spaceku நன்றி . சம்பத்
Thursday, April 12, 2012 at 04:01 am by Sampath Venkatesan
Muthukumaaraswamy Balasubramanian
en
என் அன்புள்ள சகோதர சகோதரிகளே நான் முன்பே கூறியதுபோல் இதுவரை எனது
கோரிக்கையை அதாவது பணிவான வேண்டுகோள் என்ற எனது வேண்டுகோளை
151 பேர் படித்திருக்கின்றார்கள் அனால் ஒரே ஒருவர்தான் எனது மொபைல் என்னைக் கேட்டிருக்கிறார். அதுதான் தலைப்பிலேயே இருக்கின்றதே. இருந்தாலும் நானும் தருகிறேன் 9444450601 .திருவாளர் வெங்கடேஷ் அவர்கள்தான் விடாமல் எனக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள். சாதனை செய் முறையில் எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய கருத்து மாறுபாடு உள்ளது. என்ன செய்ய. திரு தனபால் அவர்கள் எனது நல்ல நம்பர். சென்ற வாரம்கூட நான் காஞ்சிபுரம் சென்றபோது அவருடன் பேசிவிட்டுத்தான் வந்தேன், தனபால் அவர்களின் குருவாகிய திருச்சி ராமசாமி தேசிகர்கூட எனக்கு நன்கு பழக்கப் பட்டவர்தான். வள்ளலார் சொல்லாத அதுவும் வேண்டாம் என்று சொல்லியுள்ள கன்பயிற்சியை நான் எப்படி ஏற்க முடியும்.ஆனாலும் திரு வெங்கடேஷ் அவர்களின் நல்ல உள்ளத்தை நான் மதிக்கிறேன். நன்றி வந்தனம்.
Monday, April 16, 2012 at 12:40 pm by Muthukumaaraswamy Balasubramanian
Muthukumaaraswamy Balasubramanian
en
என் அன்புள்ள சகோதர சகோதரிகளே நான் முன்பே கூறியதுபோல் இதுவரை எனது
கோரிக்கையை அதாவது பணிவான வேண்டுகோள் என்ற எனது வேண்டுகோளை
151 பேர் படித்திருக்கின்றார்கள் அனால் ஒரே ஒருவர்தான் எனது மொபைல் number கேட்டிருக்கிறார். அதுதான் தலைப்பிலேயே இருக்கின்றதே. இருந்தாலும் நானும் தருகிறேன் 9444450601 .திருவாளர் வெங்கடேஷ் அவர்கள்தான் விடாமல் எனக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள். சாதனை செய் முறையில் எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய கருத்து மாறுபாடு உள்ளது. என்ன செய்ய. திரு தனபால் அவர்கள் எனது நல்ல nanbar . சென்ற வாரம்கூட நான் காஞ்சிபுரம் சென்றபோது அவருடன் பேசிவிட்டுத்தான் வந்தேன், தனபால் அவர்களின் குருவாகிய திருச்சி ராமசாமி தேசிகர்கூட எனக்கு நன்கு பழக்கப் பட்டவர்தான். வள்ளலார் சொல்லாத அதுவும் வேண்டாம் என்று சொல்லியுள்ள கன்பயிற்சியை நான் எப்படி ஏற்க முடியும்.ஆனாலும் திரு வெங்கடேஷ் அவர்களின் நல்ல உள்ளத்தை நான் மதிக்கிறேன். நன்றி வந்தனம்.mupa
Monday, April 16, 2012 at 12:44 pm by Muthukumaaraswamy Balasubramanian