SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
IKKARAI KADNDHIDIL AKKARAIYE IREUPPADHU CHIDAMBARA SARKKARAIYE ENNA PORUL?

இக்கரை கடந்தில் அக்கரையே இருப்பது சிதம்பர சக்கரையே இதற்கு என்ன பொருள்?
இந்த வரிக்குப் பொருள் காண்பதற்கு அகவலும் அருட்பாவில் இன்னொரு பாடலும் நமக்கு உதவி செய்கிறது.
பவக் கடல் கடந்து நான் பார்த்தபோது அருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே (அகவல் வரி 1392 )
கரணமெல்லாம் கரைந்த தனிக் கரை காண்பதுளதோ கரை கண்டபொழுது எனையும் கண்டு தெளிவேனோ
அரணமெலாம் கடந்த திருஅருள் வெளி நேர் படுமோ அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவம்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்து சிவ மயமாகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ
சரணமெலாம் தர மன்றில் திருநடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே.
அகவல் மூலம் நாம் அறிவது பவக்கடல் என்பது இக்கரை அதனைக் கடந்தால் ஓங்கிய அக்கறை உளது.
இந்தப் பாடலில் நாம் அறிவது கரணமெலாம் கடந்த தனிக்கரை என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கரணங்கள் எலாம் கரைந்த பிறகு ஒரு தனிக்கரை
உளது.கரணமெலாம் கரைந்துவிட்டால் அங்கே மௌனம் உண்டாகிறது. அந்த மனம் கடந்த நிலையில் இறை அனுபவம் ஏற்படுகிறது. அனுபவமாலை 54 வது
பாடலில் மனமே நீ எனைவிட்டு ஏகுதோறும் நான் காற்றரியா தீபம் போல் இருந்த அத்தருணம் கண்ட பரிசு என்புகல்வேன் ஆண்ட பகிரண்டம் தோற்றரியாப்
பெருஞ்சோதி பரநாதத்தே தோன்றியது என்று பாடியுள்ளார்.. எனவே அந்தப் பேரொளி காட்சிதான் சிற்றம்பலக் காட்சி. இதைத்தான் இக்கரை கடந்தில் அக்கரையே
என்றும் இருப்பது சிதம்பர சக்கரையே என்றும் விளக்கியுள்ளார்.