கருணை செய்ய இறைவனுக்குத் துணிவு தேவையா ?
பணிந்தறியேன்-அன்புடனே பாடுதலும் அறியேன்-படித்தறியேன்-கேட்டறியேன்-பக்தியில் பூமாலை
அணிந்தறியேன் -மனம் உருகக் கண்களில் நீர் பெருக அழுதறியேன்-தொழுதறியேன் -அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் -தயவு அறியேன்-சத்திய வாசகமும் தான் அறியேன்- உழுந்தடித்த தடியதுபோல்இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணை செய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே .
நம்முடைய குற்றங்களை எல்லாம் தன்மீது வைத்து வள்ளலார் பாடிஉள்ள பல பாடல்களில் இதுவும் ஒன்று.
ஆணவத்தினால் நான் யாரையும் இறைவா உன்னையும் சேர்த்துத்தான் நான் பணிந்ததே இல்லை.உன்மீது அன்பு கொண்டு உன்னைப் பாடியதும் இல்லை. நல்ல ஞான நூல்களைப் படித்ததும் இல்லை. அருளாளர்களின் பேச்சைக் கேட்டதும் இலை. பூஜை செய்யும்போது உன் கழுத்தில் பூமாலை அணிவேன் அதுகூட பக்தியோடு அணிந்ததில்லை. என் மனம் உருகி என் கண்களில் நீர் பெருகி நான் அழுததே இல்லை. உன்னைத் தொழுததும் இல்லை. என்னுடை ய அகங்காரம் சிறிதும் குறைந்ததில்லை- இரக்கம், தயவு, பரிவு,கருணை என்பதெல்லாம் என்னிடம் இல்லை. நான் உண்மை பேசியதும் இல்லை. விலை நிலத்தில் ஏர் உழுகின்ற தடியதுபோல் இருந்தேன்.துணிந்து எனக்கும் கருணை செய்த துரையே என் உள்ளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.
நமக்குக் கருணை செய்ய இறைவனுக்குத் துணிவு வேண்டும் என்றால் நாம் எப்படிப்பட்ட மோசமானவனாக இருக்கவேண்டும். துணிந்து என்ற வார்த்தைக்கு ஒரு புராணக்கதையை நினைவு கொள்ளலாமா?
பத்மாசூரன் என்ற ஒரு அரக்கன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். அவனது தவத்தை மெச்சி சிவபெருமானார் காட்சி அளித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பத்மாசூரன் நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவர்கள் எரிந்துபோகவேண்டும் என்ற வரம் கேட்டான். சிவபெருமானும் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டார். அவனுக்கு சந்தேகம் .உண்மையிலேயே அந்த வரத்தை இறைவன் கொடுத்தானா?எப்படி சோதித்துப் பார்ப்பது?எதிரேதான் சிவபெருமானே இருக்கிறாரே அவர் தலையிலேயே கை வைத்துப் பார்த்துவிடுவோம் என்று அவர் தலைமீது கை வைக்கத் துணிந்தான்.வரம் கொடுத்த அவரே ஓடினாராம். இந்தக் கதையில் எல்லாம் அறிந்த சிவபெருமனாருக்கு பத்மாசூரன் என்ன வரம் கேட்பான் என்று தெரியாமலா வந்தார் என்று வினவலாம். அவர் தெரிந்துதான் வந்தார். அவன் கேட்டதையும் கொடுத்தார்.அதுதான் துணிந்து வரம் கொடுத்தது. இந்தக் கதையை மனதில் வைத்தே துணிந்து எனக்கும் கருணை செய்த துரையே என்று வள்ளலார் பாடி இருக்கலாம்.

Write a comment