பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம்
இந்தத் தொடருக்குப் பலர் தவறான விளக்கத்தைத் தருகின்றார்கள். வள்ளலார் 7 .5 .1861 அன்று இறுக்கம் ரத்ன முதலியார் அவர்கட்கு எழுதிய கடிதத்தில் அடியில் கண்டவாறு எழுதிகிறார். "பகவத் பக்தியில் சிறந்தவராகிய வரதாச்சார்ய ஸ்வாமிகள் திருவயிந்திய புரத்திற்கு வததாகக் கேள்விப்பட்டேன். அந்த சுவாமிகளைச் சென்னப் பட்டணத்தில் தாம் கண்டால் ஒன்று சொல்லவேண்டுவது. அது என்னவெனில் "பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம்" என்று நான் தெரிவித்ததாகத் தெரிவிக்கவேண்டும்,..இந்த வார்த்தைகள் வள்ளலாரால் அதுவும் பக்தியில் சிறந்தவராகிய வரதாச்சார்ய சுவாமிகளிடம் கூறச் சொல்லி இருக்கின்றார். இதில் தவறான கருத்து ஏதும் இருக்க எந்த சந்தர்ப்பமும் இருக்க வாய்ப்பில்லை. திருத்தணி முருகனிடம் நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் என்று வேண்டுகிறார். இன்னொரு பாடலில் முருகா பாலின் நீர்போல நின் அடியைப் பற்றி வாழ்ந்ப்திடப் பண்ணுவாய் கொலோ என்று வேண்டுகிறார். தவறான ஒரு கருத்தை இறைவினிடம் வேண்டுவாரா? அந்த இரண்டு பாடல்களையும் பாருங்கள்
பேயும் அஞ்சுரும் பேதையார்களைப் பேணும் இப்பெரும் பேய னேற்கு ஒரு
தாயும் அப்பனும் தமரும் நட்பும் ஆய்த் தண்ணருட் கடல் தந்த வள்ளலே
நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும் சாமியே திருத்தணிகை நாதனே.
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
பாலின் நீரென நின் அடிக் கணே பற்றி வாழ்ந்திடப் பண்ணுவாய் கொலோ
சேலின் வாட்கணார் தீய மாயையில் தியங்கி நின்றிடப் செய்குவாய் கொலோ
சால நின் உளந்தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திருத் தணிகை நாதனே.
பக்தியில் சிறந்த வரதாச்சார்ய சுவாமிகளிடம் கூறச்சொன்ன இந்த தொடருக்கு என்ன பொருள்?
பாலில் நீரை விட்டால் நீர் பாலில் கலந்துவிடும். தண்ணீர் தனியாகத் தெரியாது..தண்ணீர் விட்ட பாலைக் காய்ச்சினால் தண்ணீர் ஆவியாக மேலே செல்லும்போது பாலும் நீரைப் பிரிய மனமின்றி மேலே பொங்கும். அப்படிப் பொங்கிவரும் பாலில் நீர்விட்டால் பொங்கும் பால் நீர் நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் அடங்கிவிடும். இதன் கருத்து: பார்ப்பன சிநேகம் கிடைத்தால் அவர்கள் நம்முடன் கலந்து விடுவார்கள் கடைசிவரை நம்மைப் பிரியவும் மாட்டார்கள். என்ற நல்ல கர்த்தில்தான் வள்ளலார் கூறியுள்ளார். இனிமேலாவது இந்த தொடருக்குத் தவறான பொருள் கொள்ளவேண்டாம்.
Write a comment