SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
VALLALAAR VINAA IRAIVAN REPLY

 

இறைவனிடம் வள்ளலார் தொடுத்த வினா:

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவா நின்

பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்

யார் உளர் நீ சற்றே அறை

(இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதவேண்டிய அவசியம் இல்லை.எளிமையாகப் புரிகின்ற பாடல்)

இந்த வினாவிற்கு இறைவனின் பதில்:

எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உன்னை

அல்லாது இலை எனும் அருட்பெருஞ்சோதி (அகவல்)

எல்லாம் வல்ல சித்துகள் எல்லாவற்றையும் வள்ளலாருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இறைவன் பதில் அளித்தான்

4 Comments
Ajiesh D
நோவாது நோன்பு ,idhan porul vilakkavum...pls
Sunday, November 3, 2013 at 05:31 am by Ajiesh D
Muthukumaaraswamy Balasubramanian
அன்புள்ள ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய குருமார்கள் குறிப்பாக நம் தமிழ் நாட்டிலே தோன்றிவிட்டார்கள்.தீட்சை என்ற பெயரில் பலவிதமான சாதனைகளைச் சொல்லித் தருகிறார்கள். மக்களும் அவர்களை நம்பித் தாங்கள் அருமையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை அவர்களுக்குக் குரு காணிக்கை என்ற பெயரில் கொட்டிக் கொடுக்கின்றார்கள்.மூச்சை முடிந்தவரை அடக்கு, மூச்சை முடிந்தவரை உள்ளே இழு ,அடக்கு, மெதுவாக விடு, கண்ணை இப்படிப்பார், கண்ணை மூடாதே, கண்ணாடியை முறைத்துப் பார் கரு விழியைப் பின்னே தள்ளு,காலையிலும் மாலையிலும் உனது நிழலையே உற்றுப்பார் என்பது போன்ற பலவிதமான சாதனைகளைச் சொல்லித் தருகிறார்கள். இவற்றில் எல்லாம் உடம்புக்கு ஏதாவது வரலாம், உடல் வலி வரலாம்.சில கோளாறுகள் வரலாம். ஆனால் வள்ளலார் சொல்லும் பயிற்சியில் எந்த வேதனையும் கிடையாது. அதனால்தான் உடம்பு நோகாது என்று எடுத்துக் காட்டியுள்ளார். நான் எந்தப் பயிற்சியையும் குறை சொல்ல இதை எழுதவில்லை. எந்தப் பயிற்சியில் யாருக்கு விருப்பமோ அதை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்;வள்ளலார் தரும் சாதனையில் உடம்பு நோகாது அவ்வளவுதான் .
Saturday, January 4, 2014 at 10:14 am by Muthukumaaraswamy Balasubramanian
Durai Sathanan
நோன்பு நோற்றவர்- are many in this world to attain Mukthi and more. However, all say that நோன்பு is a painful (physically and mentally) practice only.

On the other hand, Vallalar takes up நோன்பு as a soulful pleasant practice. That is what, 'நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவர்' refers to.
Thank you. All possible! Exalt The Almighty Grace only!
Sunday, January 5, 2014 at 16:36 pm by Durai Sathanan
Nathan R
கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே.

இந்த பாடலில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளபடி மற்றவர்கள் கற்பங்கள் பலகோடி காலம் முயன்றும் இறைவனை அடையாமைல் நிற்க, நம் வள்ளலாரோ இந்த பிறவியில் 32 ஆண்டுகள் பெருந்தவம் செய்து இறைநிலையை அடைந்தார். இதைத்தான் வள்ளலார் இறைவனிடம்

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவாநின்

பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்

யார் உளர் நீ சற்றே அறை.
என்றும்கூட கேட்டிருக்கலாமே!
Thursday, January 9, 2014 at 16:49 pm by Nathan R