ஒருவன் ஒரு ரிஷியிடம் ஐயா எனக்கு நரகம் சொர்க்கம் இரண்டையும் பார்க்க ஆவலாக இருக்கிறது. உங்களால் அவற்றை எனக்குக் காட்டமுடியுமா என்று கேட்டான்.அந்த ரிஷியும் அவனை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்; ang சாப்பாட்டு நேரம். அங்கிருந்தவர்கள் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக உட்கார்ந்தார்கள். சாப்பாடும் பரிமாறப் பட்டது.நரகத்தில் இருந்தவர்களுக்குத் தரப்பட்ட தண்டனை என்னவெனில் அவர்களால் கையை மடக்க முடியாது.சாப்பாட்டைக் கையில் எடுத்தார்களே ஒழிய அதைச் சாப்பிட முடியவில்லை. என் எனில் அவர்களால் கையை மடக்க முடியாது. கடைசி வரை போராடிவிட்டுச் சாப்பிடாமலே எழுந்து போனார்கள்.
பிறகு ரிஷி அவனைச் சொர்கத்திற்கு அழைத்துப் போனார். அங்கும் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக அமர்ந்தார்கள்.அவர்களாலும் கையை மடக்க முடியாது. ஆனால் சாப்பாட்டைக் கையில் எடுத்து எதிரே இறந்தவனுக்கு ஊட்டினான்,எதிரே இருந்தவன் இவனுக்கு ஓட்டினான். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாக எழுந்து போனார்கள்.
அடுத்தவனுக்குக் கொடுக்க மனமில்லாமல் தானே சாப்பிட நினைப்பது நரகம் அடுத்தவனுக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுவது சொர்க்கம். நாம் தயவோடு வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யம் கொண்டு வாழ்வோமாக.