இந்தக் கட்டுரை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழுதப் படவில்லை. எனது கருத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள். நன்றி.
பேய் என்பது உண்டா ? ஆண் பேய் பெண்களையும் பெண் பேய் ஆண்களையும் பிடித்துக்கொள்ளுமா? மந்திரவாதிகள் பேய் ஓட்டுவது உண்மையா?
பேய் என்பது எது? தூக்குப் போட்டுக்கொண்டோ,கிணற்றிலோ அல்லது குளத்திலோ விழுந்து அகால மரணம் அடைந்தவர்களின் ஆவியானது அவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் வாழ்ந்திருந்தால் எவ்வளவு காலம் வாழ்ந்திருப் பார்களோ அவ்வளவு காலம் வரையில் இந்த பூமியில் அலைந்து கொண்டிருக்கும். அதுதான் பேயாக மற்றவர்களின் உடம்பினில் புகுந்துகொண்டு ஆட்டுகிறது. இது உண்மையா?
இந்த உடம்பில் உள்ள உயிரின் அளவைத் திருமூலர் கூறுகிறார், ஒரு பசு மாட்டின் உடம்பில் உள்ள ஒரு ரோமத்தை எடுத்து அதனை ஒரு லட்சம் துண்டு போட்டால் அந்த ஒரு துண்டின் அளவுதான் உயிரின் அளவாகும். எந்த உயிரும் உடம்பைவிட்டுப் பிரிந்தால் தானே இயங்க முடியாது என்கிறார் வள்ளலார். மேலும் அந்த உயிரானது எந்தக் கல்ப காலத்தில் நஷ்டம் அடைந்ததோ அந்தக் காலம் வரையில் மண்ணில் மறைந்திருந்து பின்னர் செய்த வினைக்கேற்ப மறு பிறவிதான் எடுக்கும் என்கிறார். எந்த உயிரும் எந்த உடம்பிலும் தானே நுழைய முடியாது. எனவே பேய் என்பது இல்லை இல்லை இல்லவே இல்லை.
சரி பேய் பிடித்ததாக சொல்லப்படும் பெண்களின் சேஷ்டைகளுக்கு என்ன காரணம்? மன நிலை கோளாறுதான் காரணம்.அவர்களைத் தயவு செய்து மன நல மருத்துவரிடம் கொண்டு காட்டுங்கள். மந்திர வாதியிடம் கொண்டு காட்டி அடிவாங்க வைக்காதீர்கள், . நன்றி .
Write a comment