V நாம் எப்படி வாழவேண்டும்?
நாம் எதற்கும் கோபம் அடையக்கூடாது. ஏன்? சினம் வெகுளி ஆகிய இரண்டும் நமது ஆயுளையும் தேகத்தையும் நஷ்டம் செய்யும் என்று வள்ளலார் எடுத்துக்
காட்டுகிறார். விஷம் சாப்பிட்டவுடனே கொல்லும் கோபம் மெதுவாகக் கொல்லும். அதாவது அது slow poison எனவே மரண நாளைத் தள்ளிப் போட
வேண்டுமானால் முதலில் இந்த நிமிடத்திலிருந்தே கோபத்தை ஒழிக்கவேண்டும். நடந்தது எதுவாயினும் அது நடந்து விட்டது. கோபத்தினால் அது
மீண்டும் வராது.கோபத்தினால் நாம் நம்மையே கொள்ளுகிறோம். வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் சாதுக்களையே எதிர்பார்க்கின்றார் சன்மார்க்க
சங்கத்து சாதுக்கள் காணச் சத்தியம் சத்தியம் சொன்னேன். இது அருட்பா.
௨. நாம் எதற்கும் கவலைப் படக் கூடாது. நடந்தது நடந்துவிட்டது. நடக்கப் போவது நன்மையானதாகவே இருக்கும்படி நமது வள்ளலார் கருணை காட்டுவார்.உள்ளும்புறமும் வள்ளல் துணை இருக்க வாட்டம் ஏன் என்பது வள்ளலார் வாக்கு. கவலைப் படுபவர்கட்கு இருதயம் பாதிக்கும் என்றும் இருதய நோய் வரும் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். நாம் எதற்கும் கவலைப் படக்கூடாது.
3 எந்தச் செயலை ஆரம்பித்தாலும் நன்கு சிந்தித்தே முடிவெடுத்து செயலை ஆரம்பிக்கவேண்டும்.
4 நமது வருமானம் எவ்வளவு என்று ஓரளவிற்கு நமக்குத் தெரியும். நமது செலவை அந்த வருமானத்திற்குள் நிறுத்தினால் வறுமையும், கடன் வாங்கும் சூழ்நிலையும்
வரவே வராது. இது வள்ளலார் வாக்கு.
5 நமது பெருமை என்று பேசினால் நிறைய பொய்கள் வரும். ஆண்டவனின் .அதாவது வள்ளலாரின் பெருமையைப் பேசினால் நமக்கு புகழ் வரும் . எனவே நம்மைப்
பற்றி பேசாமல் வள்ளலாரைப் பற்றியே பேசுவோம்.
6 நமது மனதிலே தயவு அதாவது உயிர் இரக்கம் ஒன்று மட்டும்தான் இருக்கவேண்டும். அந்தத் தயவு இருந்தால் எந்தத் தவறும் நம்மால் செய்ய முடியாது. முதலில்
நமது மனைவியையும் நமது மக்களையும் தயவோடு அணுகுவோம். வீட்டில் நிம்மதி கிடைக்கும். அப்படி செய்யாதவர்கள் வெளியிலும் தயவோடு இருக்கமுடியாது.
7 தயவு இருந்தால் அல்ல ஒழுக்கங்களும் தானாகவே வந்துவிடும்.
8 வள்ளலார் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் நமக்கு எந்த பயமும் வராது.
முதன் முதலில் உங்களுடைய வெப் சைட் இப்பொழுதுதான் பார்கிறேன்.
நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து பார்க்க விரும்புகிறேன்.
நன்றி