SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
NALLA SEEDAN YAAR?


ஒருவன் நல்லதொரு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். அவன் சந்தித்த யாரும் அவனுக்கு நல்ல குருவாக தோன்றவில்லை. தேடித் தேடி கடைசியாக ஒருவரிடம் வந்தான். எல்லோரும் அவர் ஒரு நல்ல குரு என்று சொன்னார்கள். அவன் அவரை வணங்கி ஐயா என்னைத் தங்களது சீடனாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டினான். நான் எவ்வளவோ குருமார்களைச் சந்தித்தேன் யாரும் எனக்கு சிறந்த குருவாகத் தோன்றவில்லை.தாங்கள்தான் நல்ல குரு என்று இன்று கண்டுகொண்டேன்.தாங்கள் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு உபதேசம் செய்யவேண்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுத்தான். அவரும் நல்லது நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன். நான் இடும் பணியை நீ செய்வாயா என்று கேட்டார்.நிச்சயமாகச் செய்வேன் என்றான். அப்படியானால் அந்தக் கிணற்றிலே இருந்து நீரை எடுத்துப் பக்கத்தில் இருக்கும் தொட்டியை நிரப்பு.தண்ணீர் மெள்ளப் பக்கெட்டும் கயிறும் அங்கேயே இருக்கிறது பார். அந்தப் பக்கெட்டில்தான் தண்ணீர் மொள்ளவேண்டும். அடுத்தது இன்று மாலை வரை எக்காரணம் கொண்டும் என்னிடம் எதுவும் பேசக்கூடாது.என்னிடம் எதுவும் கேட்கக் கூடாது என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லி அவனும் கிணற்றடிக்குச் சென்றான். பக்கெட்டைக் கிணற்றில் விட்டான். கயிறை இழுத்தான். பக்கெட் வந்தது ஆனால் அதில் நீர் துளிக்கூட இல்லை. ஏன் என்று பார்த்தான். அந்தப் பாக்கெட்டில் அடியில் ஒன்றுமே இல்லாமல் இருந்தது.அதாவது பாக்கெட்டின் அடிப்பாகம் மூடாமல் இருந்தது. தண்ணீர் எப்படி அதில் வரும். குருவோ மாலைவரை எதுவும் பேசக்கூடாது எதுவும் கேட்கக்கூடாது என்று சொல்லி உள்ளார்;இந்தப் பக்கெட் சரி இல்லை என்பது அவருக்குத் தெரியுமா தெரியாதா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.அதை அவரிடம் கேட்கலாமா கூடாதா?மாலை வரை பேசக்கூடாது என்று சொன்னாரே அவர் பேச்சைத் தள்ளலாமா?நெடு நேரம் யோசித்தான்.முட்டாள்தனமாக ஓட்டைப் பக்கெட்டில் தண்ணீர் எடுத்துப் பக்கத்துத் தொட்டியை எவ்வாறு நிரப்ப முடியும். கேட்டுவிடுவதே புத்திசாலித்தனம் என்று நிச்சயித்தான்.குருவிடம் போனான். ஐயா இந்த ஓட்டைப் பக்கெட்டில் தண்ணீர் எப்படி எடுக்கமுடியும் என்று கேட்டான். நீ எப்படி ஒரு நல்ல குருவேண்டும் என்று தேடினாயோ அதைப்போல் குருவும் ஒரு நல்ல சீடனைத்தான் ஏற்றுக்கொள்வார். அந்தப் பக்கெட் என்னுடையதுதானே அது ஓட்டை என்றும் அடிப்பாகத்தை மூடவே இல்லை என்றும் எனக்குத் தெரியாதா? உன்னைச் சோதிக்கத்தான் நான் அந்தப் பக்கெட்டில் தண்ணீர் மொள்ளச்சொன்னேன். நீ என் வார்த்தையை மதிக்கவில்லை. என் சொல்படி நடக்கவும் இல்லை. மாலைவரை என்னிடம் பேசாதே என்றேன். அதையும் நீ மீறிவிட்டாய். நீ நல்ல சீடன் அல்ல ,.நானும் உனக்கு குரு அல்ல. நீ எனக்குச் சீடனாக இருக்க லாயக்கில்லை போ என்று சொல்லிவிட்டார். இதிலிருந்து நாம் அறியவேண்டியது என்ன? குரு என்ன சொன்னாரோ அதன்படி நடப்பவனே உண்மையான சீடன் ஆவான். அவன்தான் அவரை குரு என்றும் சொல்லலாம். வள்ளலார் அன்பர்களை நோக்கி அவர் கடைசியாகச் சொன்னது என்ன?" நீங்கள் இதுகாறும் என்னோடு பழகியும் சன்மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்றும் திட சித்தம் செய்துகொண்டீர்கள்." இதுவே வள்ளலார் நம்மைப் பார்த்துச் சொன்ன வாசகங்கள். .யாரும் அவருக்கு சீடராக அமையாததனால்தான் அவர் சன்மார்க்க சங்கத்தை யாரிடமும் விடாமல் நானே நடத்துகின்றேன் என்று சொன்னார். வள்ளலார் சொன்னபடி நடக்காதவர்கள் வள்ளலாரை குரு என்று சொல்வதில் என்ன பயன்.?வள்ளலார் யாரையும் தமது சீடன் என்று யாரிடமும் சொன்னதாக ஆதாரம் எதுவும் இல்லை. நாம் இன்று தொடங்கியாவது வள்ளலாரின் சொல்படி நடந்து அவரது உண்மைச் சீடனாவோம்.