SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
PUDHUP POONAI KONDU VAA


புதுப் பூனை கொண்டு வா

கோவிந்தன் என்பவன் ஒரு பூனை வளர்த்து வந்தான். அந்தப் பூனை அவனிடம் மிகவும் நெருக்கமாகப் பழகும். அவன்மீதெல்லாம் ஏறி விளையாடும்.
அவன் தினமும் காலையில் பூஜை செய்யும்போது அந்தப் பூனை எந்தத் தொந்தரவும் செய்யாமல் இருக்க அதனை ஒரு கம்பத்தில் கட்டிப் போட்டுவிட்டு பூஜை
செய்வான்., இதை அவனது மகன் கவனித்து வந்தான் . கோவிந்தன் ஒரு நாள் இறந்து போனான்.மறுநாள் அவன் மகன் பூஜை செய்ய ஆரம்பித்தான்,.. அவனும் அவனது
தகப்பனார் செய்தது போலவே பூனையைக் கம்பத்தில் கட்டிவிட்டு பூஜை செய்து வந்தான். ஒரு நாள் பூனை இறந்து
போய்விட்டது. மறுநாள் பூஜை செய்ய வந்தான்.
பூனையைக் கம்பத்தில் கட்டிப் போட்டுவிட்டுத்தானே பூஜை செய்யவேண்டும். பூனைதான் இறந்துவிட்டதே என்ன செய்வது என்று திகைத்தான். நன்கு சிந்தித்தான் .
வெளியே போனான். ஒரு பூதிய பூனையைப் பிடித்துக் கொண்டு வந்து அதைக் கம்பத்தில் கட்டிப் போட்டுவிட்டு பூஜை செய்தான். இந்தக் கதை மூலமாக நாம் என்ன
தெரிந்துகொள்கிறோம்?

நாம் பலப்பல சடங்குகள் செய்கிறோம். தத்தா செய்தார். அப்பா செய்தார். நாம் செய்கிறோம். அவ்வளவு தான் .சடங்கு செய்யவேண்டியது ஏன்
என்றும் தெரியாது.அந்தச் சடங்கை இப்படி ஏன் செய்யவேண்டும் என்றும் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு சிறிய சடங்கு?
திருமணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது மணமகனின் சகோதரி மணமகளின் பின்னால் விளக்கைப் பிடிப்பாள். இது ஏன்?
விளக்கைப் பிடித்த பெண் தாலி கட்டிய பிறகு மணமகளின் பெற்றோரிடம் பணம் கேட்டு வாங்குவாள். இதற்காகவா விளக்கு பிடித்தது?
அந்த விளக்கிற்குப் பதி விளக்கு என்று பெயர். பதி என்றால் இறைவன். மணமகன் இறைவனின் முன்னிலையில் அவன் சாட்சியாக மணமகளின் கழுத்தில் தாலி
கட்டி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்கிறான் என்பதே அதன் விளக்கம்
அதுமட்டுமல்ல. மணமகனின் சகோதரி ஏன் அந்த விளக்கைப் பிடிக்கவேண்டும்.? வேறு யாரும் செய்யக்கூடாதா?மணமகளே நீ எனது சகோதரனுக்கு மனைவியாக வருவதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நாத்தனார் கொடுமை என்னிடம் இருக்காது என்று மணமகளுக்கு உறுதி அளிக்கிராளாம் .
இந்த உண்மையை யார் அறிவார், புதுப் பூனை கொண்டுவந்ததுபோல்தான் இந்தச் சடங்கும் நடை பெறுகிறது.