மனதில் உள்ள சஞ்சலம் நீங்க
தெரிந்தோ தெரியாமலோ நாம் உலகியலில் சிக்கிக்கொண்டு திணறுகின்றோம். படித்தவர்கள், பாமரர்கள், பணக்காரர்கள், ஏழைகள், யாராய் இருந்தாலும் மனம்
சஞ்சலப் படும் நேரம் வருகிறது. அந்தக் காலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல். தவிக்கின்றோம். நம் வாழ்க்கையில் மன நிம்மதி ஒன்றுதான் முக்கியம் .
வேறு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம். மன நிம்மதி பலப் பல காரணங்களால் சிதைந்து போகிறது. அந்த நேரங்களில் என்ன
செய்வது என்றே தோன்றுவதில்லை.இறைவா என் சஞ்சலத்தைக் கண்டார் யாராய் இருந்தாலும் இரங்குவார்கள் கேட்டார் உருகுவார்கள்.ஆனால் இறைவா
உனக்கு மட்டும் என் மீது இரக்கம் தோன்றாமல் போனது ஏன்? உன் அருளானது ஒரு சிறிது ஒரு துரும்பினுக்குக் கிடைத்துவிட்டால் அந்தத் துரும்பே ஐந்து
தொழிலையும் என்பார்கள். நீ உன்னை நெருங்காத மனதில் தூய்மையும் இல்லாதவர்கள் பிழைகளை எல்லாம் பொறுப்பவர் ஆயிற்றே.என் மீது இரக்கம்
காட்டாமல் என்னைச் சஞ்சலப் படுமாறு விட்டுவிடுவது உன் அருட்கு அழகா?
தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இத்தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
துண்டார் மலர்ச் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே
இது யார்மீது பாடிய பாடல் என்று எண்ணவேண்டாம். எல்லாப் பாடல்களும் இறைவன்மீது பாடப் பட்டதே. எனவே மனதில் கவலை உள்ளவர்கள், சஞ்சலம்
உள்ளவர்கள் வள்ளலார்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள்.