SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
TO ESCAPE FROM OUR HIGH OFFICIALS

நமக்கு மேல் அதிகாரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற

நம்முடைய வாழ்க்கைக்குப் பொருள் தேவைப் படுகிறது. நாம் எங்காவது உழைத்தே ஆகவேண்டும்.அப்படி உழைக்கும் பொழுது நமது மேலதிகாரிகள் நம்மை uu
ஏதாவது தொந்தரவு அடிக்கடி செய்தால் நாம் அவர்கட்கும் மேலதிகாரிகளிடம் முறையிடவேண்டும் . அவர்கட்கு மேலதிகாரி யார்?நம் வள்ளலார்தான் k.
நாம் அவரிடம் எப்படி முறையிடுவது? அதற்கு இதோ ஒரு பாடல் :

அடிமை செயப் புகுந்திடும் எம்போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்தருளும் அரசே

நாயேன் கொடுமை செயும் மனத்தாலே வருந்தி ஐயோ குரங்கின் கை மாலைஎனக் குலையாநின்றேன்
கடுமை செயப் பிறர் துணிந்தால் அடிமை தன்னைக் கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
செடிமை உளப் பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறியேன் திகைக்கின்றேனே (மகா தேவ மாலை)

நமக்குப் பிறர் தீங்கு செய்யும் போதோ அல்லது தீங்கு செய்யக்கூடும் என்று உணர்ந்த போதும் இந்தப் பாடலைப் பாடிப் பணியலாம்.

Senthil Maruthaiappan
I think, we need posting like this and these kind of posts are very informative and encouraging for common people for leading their life in current situation. Ayya, please bring in topicslike this.
Friday, February 24, 2012 at 07:28 am by Senthil Maruthaiappan