உடற்பிணி போக்க அருட்பாவில் பாடல்
பொல்லாத சூர்க் கிளையைத் தடிந்து அமரர் படும் துயரப் புன்மை நீக்கும்
வல்லானே எனது பிணி நீ நினைத்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினதடியர் கழகம் கூட்டாய்ச்
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி தனில் அமர்ந்த தெய்வக்குன்றே
இந்தப் பாடல் நமது பெருமானாரின் அண்ணன் திரு பரசுராமப் பிள்ளை அவர்கள் உடல் நலம் குன்றி இருந்த காலத்தில்
அவரது உடல் நலம் பெற நமது பெருமானார் சிங்கபுரிக் கந்தர்மீது பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அதில் ஒரு பாடல்தான் இது.நாமும் நமது
உடல் நலம் பெற இந்தப் பாடலைப் பாடி வணங்கலாம். நமது பெருமானாரை வணங்கவும் ஒரு பாடல் உள்ளதே;
வாராத வல்வினை நோய் வந்தாலும் வன்மையோடு சேராத பாவமெல்லாம் சேர்ந்தாலும்
தீராது என்று யார் சொன்னார் எங்கள் அருட்ப்ரகாசப் பெருமான் பேர் சொன்னால் போமே பிணி.
எந்த நோய் வந்தாலும் எங்கள் அருட்ப்ரகாசப் பெருமான் பேர் சொன்னால் போமே பிணி என்றால் அவர் பேர் சொல்லவேண்டும் அல்லவா?
அதற்கும் ஒரு பாடல் உண்டு.
பொன்னாலே சூழுலகம் புகல்கின்ற ராமளைங்கப் புனித ஞான
மன்னாலே வாய் மலர்ந்த மன் அருட்பா மாமுறையை மகிழ்வினொடு
சொன்னாலே நாவினிக்கும் கேட்டாலே உளம் இனிக்கும் துதித்த பேர்க்கு
முன்னாலே செய்த வினை முற்றொழிந்து கை கூடும் மோக்கம் தானே
இந்தப் பாடலில் நம் பெருமானாரின் பெயரும் வருவதாலே அவரையும் வணங்கினதாகும். நோய் போய்விடும். ஓதுவோம். குணம் பெறுவோம்

Write a comment