KADAI VIRITHTHEN KOLVAAARILLAI KATTIVITTEN IS THIS TRUE?
posted 3 months ago
04 Feb 2012 07:40:23 GMT 7:40:23 AM
240 views
கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் இது வள்ளலார் வாக்கா?
`
இது வள்ளலார் வாக்காக இருக்க வாய்ப்பே இல்லை. ஏன் எனில் எந்தப் பாடலிலும் இந்த வாக்கியம் இல்லை. உரை நடையிலும் இல்லை. காரணப்பட்டு
கந்தசாமிப் பிள்ளை எழுதிய இராமலிங்கர் சரித்திரக் குறிப்பில் மட்டுமே காணப்படுகின்றது. இது உண்மை என்றால் சன்மார்க்கம் தோல்வி என்றல்லவா ஆகும்.
சன்மார்க்கம் உலகம் பூராவும் அல்லவா வெகு வேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் அச்சில் வார்ப்பேன் ஆகா விட்டால் மொடாவில் வார்ப்பேன் என்றுதான்
வள்ளலார் கூறியுள்ளார். பேருபதேசத்தில் வள்ளலார் கூறியுள்ளது."என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத் தனமாய் எப்படி இருந்தாலும் அவனுக்கு
நல்ல வார்த்தை சொல்லுவேன்,மிரட்டிச் சொல்லுவேன். தெண்டன் விழுந்து சொல்வேன்.அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன். அல்லது
ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லோரும் இப்படியே செய்தல்
வேண்டும் என்று கூறியுள்ளார். வள்ளலாரின் பாடல்கள் இவை அனைத்தையும் கொண்டுள்ளதைக் காணலாம். காரணப் பட்டு கந்தசாமிப் பிள்ளை கூறியுள்ளதற்கு
அருட்பாவில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே யாரும் கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் என்று வள்ளலார் சொன்னதாகத் துயவு செய்து இனிமேல்
யாரும் சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளப்படுகிறது. நன்றி.