SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
AVARKATKUM ARIVU ARULVEERAAGA

தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும் சேர்கதி பல பல செப்புகின்றாரும்

பொய் வந்த கலை பல பல புகன்றிடுவாரும் பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்

மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றிலார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்.

எய் வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே

தெய்வம் ஒன்றுதான் உண்டு என்று உணராதவர்களும் அடைகின்ற கதிகள் பல பல உண்டென்று சொல்பவர்களும், கற்பனையாக வந்த புராணங்கள் போன்றவற்றை போதிப்பவர்களும்,பொய்யான சமயங்களைப் போற்றிப் புகழ்வோரும் ஆண்டவனின் திருவருள் விளக்கம் இல்லாதவர்கள். இறைவா அவர்கள் படும் துன்பத்தை ஒழித்து அவர்க்கும் அறிவு விளக்கம் அருள்வீராக. எனக்கு உண்மை அறிவித்து உண்மை இன்பத்தை அளித்தீரே.