வள்ளலாரின் உரை நடை. தொண்ட மண்டல சதகம். (தவத் திரு ஊரன் அடிகளார் பதிப்பு-பக்கம் 119 ) "வாத நாராயண சம்பந்தத்தின் இனம் போலும்"
தொண்ட மண்டலமா அல்லது தொண்டை மண்டலமா எது சரி என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளித்த வள்ளலார். தொண்டை மண்டலம் என்பது சரியல்ல என்ற கூறும்போதுதான் அது வாத நாராயண சம்பந்தத்தின் இனம் போலும் என்று கூறியுள்ளார். இதன் விளக்கம் என்ன?
ஓர் ஊரில் ஒருவனது வண்டி சக்கரம் ஒடிந்து விட்டது. அவன் வேறொரு சக்கரம் செய்ய தேக்கு மரம் வாங்கி வண்டி சக்கரம் செய்பவனிடம் கொடுத்து எனக்கு ஒரு வண்டி சக்கரம் செய்து தரும்படிக் கேட்டான் அவனும் ஒப்புக்கொண்டு சக்கரம் செய்ய ஆரம்பித்தான். அந்த நேரத்தில் அவனுக்குப் பணம் தேவைப்பட்டது.வண்டி சக்கரத்
திற்காக இருந்த தேக்க மரத்தில் ஒரு பகுதியை விலைக்கு விற்றுவிட்டான். அதனால் சக்கரத்திற்கு ஒரு ஆரம் செய்ய மரம் இல்லாமல் போய்விட்டது. அவன் என்ன செய்வான். ?தன் வீட்டுப் பின் புறம் இருந்த வாதநாராயண மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அந்த வண்டிக்கு உரிய ஆரத்தைச் செய்து முடித்துவிட்டான்.
வண்டிக்குரியவன் வந்து சக்கரம் செய்தாகிவிட்டதா என்று கேட்டான்.சக்கரத்தை வாங்கிப் பார்த்தான். அதில் ஒரு ஆரம் தான் வாங்கிக் கொடுத்த தேக்கு மரம் இல்லை என்று கண்டு ஆத்திரப்பட்டு சக்கரம் செய்தவனை அடிக்க வந்தான்.அடிக்குப் பயந்து சக்கரம் செய்தவன் தெருவில் ஓடினான். அவன் துரத்திக்கொண்டே வந்தான். இவன் வேகமாக ஓடிவந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டு அம்மாள் யாரோ ஒரு விருந்தாளி நம் கணவருக்கு வேண்டியவர்போலும் அதனால்தான் இவ்வளவு உரிமையோடு உள்ளே வருகிறார் என்று எண்ணி அவரை வரவேற்று உபசரித்தாள். இதவும் நல்லதற்குத்தான் என்று மகிழ்ச்சியோடு சக்கரம் செய்தவனும் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டான். பல நாட்கள் கழிந்தும் அவன் அங்கேயே தங்கி இருந்தான். தன் புருஷனுக்கு வேண்டியவர் ஆயிற்றே என்று அந்த அம்மாளும் ஒன்றுமகேட்காமல் உபச்சாரம் செய்துகொண்டிருந்தாள். அந்த அம்மாளின் கணவர் அந்த ஆள் தன் மனைவியின் சொந்தக்காரர் போலும் அதனால்தான் இவ்வளவு உபச்சாரம் நடக்கிறது என்று எண்ணி அவரும் ஒன்றும் கேட்கவில்லை. இப்படி இருந்துவந்த நாளில் ஒரு நாள் இரவு உணவில் தயிர் கட்டியாக இல்லாமல் சற்று இளக்கமாக இருந்தது.அந்த விருந்தாளி அந்த அம்மாவைப் பார்த்து இது மானங்கெட்ட தயிரா என்று கேட்டான். ஏன் அப்படிச்சொன்னேன் என்றால் தயிர் ஆடை இல்லாமல் இருந்தது அதனால்தான் சொன்னேன் என்றான். இத்தனை நாட்கள் இவ்வளவு உபச்சாரம் செய்தும் நன்றி இல்லாமல் இப்படி சொல்லிவிட்டாரே என்று வருந்தி தன் கணவனிடம் உங்கள் சொந்தக்காரர் நன்றி இல்லாதவர். இவ்வளவு நாள் நான் செய்த உபசாரத்தை மனதில் கொள்ளாமல் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று வருத்தப் பட்டாள்.அடிப் பாவி அவர் உன்னுடைய சொந்தக்காரர் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் என் சொந்தக் காரர் அல்ல விடிந்ததும் கேட்டு விடலாம் என்றார். நீங்கள் யாருக்கு சொந்தம் என்று காலையில் கேட்டனர். அவன் சொன்னான் "நான் ஒருவருக்கு வாத நாராயண மரத்தில் ஆரம் செய்து கொடுத்தேன் அவர் என்னை அடிக்க வந்தார். அவருக்குப் பயந்து நான் ஓடிவந்தேன். உங்கள் வீட்டு முன்னாள் இருந்த வண்டியிலும் ஒரு ஆரம் வாதநாராயண மரத்தில் இருந்ததைப் பார்த்தேன். அதனால்தான் இந்த வீட்டினுள் நுழைந்தேன். நம் இருவருக்கும் வாத நாராயண சம்பந்தம்தான் என்றானாம். இதைத்தான் வாத நாராயண சம்பந்தத்தின் இனம் போலும் என்று வள்ளலார் கூறியுள்ளார்.
Write a comment