SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
SUDHDHA SANMAARGATHTHIN MARABU EDHU?

சுத்த சன்மார்கத்தின் மரபு எது?
நடராஜபதி மாலையில் வள்ளலார் தரும் விளக்கம்:

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலமைந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலதாகும் இந்நான்கையும் ஒருங்கே வியந்தடைந்து உலகமெல்லாம்
மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாம் மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்கத்தின் மரபு என்றுரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத் தேற்றி அருள் செய்த சிவமே சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராஜ பதியே
சுத்த சன்மார்கத்தைச் சார்ந்துள்ள நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியதும் அடையவேண்டியதும் இந்தப் பாடலில் வள்ளலாரால் தெரிவிக்கப்படுகிறது.ல்
1 சாகாத கல்வியே கல்வி என்கிnறார். உடம்பு அழிந்தாலும் எந்தக் கல்வி அழியாமல் அடுத்த பிறவியிலும் தொடர்ந்து வருமோ அதுவே சாகாத கல்வி ஆகும்.இதற்கு வள்ளல் பெருமானாரே சான்றாக இருக்கிறார், இந்தப் பிறவியில் அவர் யாரிடமும் கல்வி பயிலவில்லை. முற்பிறப்பில் அவர் அடைந்திருந்த ஞானம் இந்தப் பிறவியிலும் அவரைத் தொடர்ந்து வந்தது. இதுவே சாகாக் கல்வி.இந்தக் கல்விக்கு மூன்று பாகங்கள் உண்டு. அதாவது 1 சாகாத் தலை,௨.வேகாத கால். ,3 போகாப் புனல். இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தாகிய சா,வே, போ, ஆகிய மூன்று எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தாலே சாவேபோ என்ற வார்த்தை வரும். நம்முடைய காலத்தை வீணில் கழிக்காமல் இந்தக் கல்வியை எப்பாடு பட்டாவது கற்கவேண்டும்,.
௨. சிவம் என்பது ஒன்றே ஒன்றுதான். அது பல அல்ல.தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும் என்ற பாடலை இங்கு படித்து உணரவேண்டும். அந்த சிவமும் தானே என்று அறிந்த அறிவே சரியான அறிவு என்கிறார்.
3 .ஆணவம், மாயை, கன்மம், மகா மாயை,திரோதை என்ற ஐந்து மலங்களையும் வெல்லக்கூடிய ஆற்றலே ஒப்பற்ற ஆற்றல் ஆகும். நாம் உலகமே வியந்து பாராட்டக்கூடிய செயலைச் செய்து முடித்தாலும் அது மிக மிகச் சாதாரணம்தான்இந்த ஐந்து மலங்களையும் வெல்லும் ஆற்றலே ஆற்றல். அது ஒப்பற்ற ஆற்றல்.
4 வேகாத கால் முதலியவற்றை அறிந்து அதனால் எந்தப் பொருளையும் படைக்கக்கூடிய சக்தி பெறுவதே ., நாம் செய்யவேண்டிய தொழில் ஆகும். இதற்கு மிஞ்சிய தொழில் வேறு ஏதும் இல்லை.
இந்த நான்கையும் நாம் பாராட்டி அவற்றை அடைந்து உலகத்து உயிர்கள் அனைத்தும் நம்முடைய செயலைக் கண்டு நம்மீது மிகப் பெரிய விருப்பம் கொள்ளுமாறு நாம் அந்த உயிர்கட்கு அளிக்கும் வரமும் அதனால் அந்த உயிர்கள் அடையும் ஆனந்தத்தைக் கண்டு நாம் அடையும் இன்பமே உண்மையான இன்பம் ஆகும்.
இதுவே சுத்த சன்மார்கத்தின் மரபு என்று உரைத்த குருவே.
உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் நான் தருமுன்பே அருள் செய்து எனைத் தேற்றி அருள் செய்த சிவமே .சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே,தெய்வ நடராஜ பதியே.