மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராதென்றே
கட்டகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கிக் கலை அகற்றிக் கருவிஎலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத் தேவே. (மகாதேவ மாலை பாடல் எண் 56 )
முடிந்தவரை இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம்.
அளவு கடந்த நெடுங்காலமாக நான் இறைவனையே மனதில் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். வேறு எந்த நினைவும் எனக்கு இல்லை.நான் எப்போதும் இறைவனின் பாடல்களையே பாடிக்கொண்டு இருக்கிறேன் என்பதால் இறை அனுபவம் வாராது. செயல் ஏதும் இல்லாது மனதால் நினைப்பது மட்டுமே இருந்தாலும் ,பொருள் புரியாது மனம் நெகிழாது வாயால் மட்டுமே பாடிக்கொண்டு இருந்தாலும் வாராது. இதித்தான் புலம்புதல் என்றார்/ ஆனால் என்னதான் செய்யவேண்டும்? மனதிலே என்றும்
நிலைத்து நிற்கின்ற பந்தத்தை அதாவது பற்றை யார் அகற்றுகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான அறிவுடையோர் ஆவர்.அந்த அறிவுடையோர் மனம்,புத்தி, சித்தம், அகங்காரம் என்ற கரணங்களின் செயல்பாட்டை நிறுத்தவேண்டும்.அடுத்து மனம் அடங்கியதால் மூச்சும் நின்றுவிடும்.இந்த நிலையைத்தான் கலை அகற்றி என்றார்.இந்திரியங்கள் அனைத்தினையும் நிறுத்தி ஆசை அனைத்தினையும் விட்டு அகன்று நாம் இதைச் செய்தோம் அதைச் செய்தோம் இவ்வாறு வேறு யாராலும் செய்ய முடியுமா என்றெல்லாம் ஆனந்தப் படுகின்றோமே அந்த போதம் எல்லாவற்றையும் விட்டு ஆணவம்,மாயை,,கன்மம் என்கின்ற மும்மலங்களின் அதிக்ரமித்த செயல்களையும் நீக்கி.தவத்தால் சுட்டு உலகியலில் இருந்து அகன்று யார் நிற்கின்றார்களோ அவர்களை துரிய அனுபவமாகிய சிவம் தானே முற்றும் சூழ்ந்து கலந்திடுமாம்
Write a comment