முன் பாட்டுக் காலையிலே வருகுவர் என் கணவர் மோசமில்லை மோசமென மொழிகின்றோர் மொழிக
பின் பாட்டுக் காலையிலே நினைத்த வெல்லாம் முடியும் பிசகிலை இம்மொழி சிறிதும் பிசகிலை
துன் பாட்டுச் சிற்றினத்தார் சிறு மொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய்
தன் பாட்டுத் திருப் பொதுவில் நடத் திறைவர் ஆணை சத்தியம் மாதே சத்தியமே
வைகறை ஆகிய விடியர்க் காலையிலே என் கணவராகிய இறைவர் வருவார் என்கின்றேன் இதை நம்பாமல் சிலர் இதெல்லாம் சொம்மா மோசம் என்று சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் சொல்லட்டும் .விடிந்த பிறகு அந்த நாள் முழுவதும் நினைத்த வெல்லாம் கை கூடும். இம்மொழி சிறிதும் தவறானது அல்ல.
துன்பத்தையே அனுபவித்து வருகின்ற குணத்தில் தாழ்ந்த இனத்தார் கூறும் சிறு மொழி கேட்டு உன் உள்ளத்தைக் கலங்கவிடாதே ஒன்பது வாசல் கொண்ட நமது மாளிகையாகிய இந்த உடம்பை நன்கு அலங்கரிப் பாய் இது திருப் பொதுவாகிய திருச் சிற்றம்பலத்தே நடம் இயற்றுகின்ற இறைவனின் ஆணை பெண்ணே இது சத்தியம் சத்தியமே.
குறிப்பு: இந்தப் பாடலின் கடைசி வரியில் முதலில் இரண்டு முறை சத்தியம் கூறி மாதே என்று அழைத்து மறுபடி இரண்டு முறை சத்தியம் கூறுகின்றார். ஞான சரியை முதல் பாடலில் சத்தியம் என்ற வார்த்தை ஒரு முறைதான் வருகிறது.சத்தியம் சத்தியம் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே எனைத் தாங்குகின்றீரே என்ற பாடலில் சத்தியம் என்ற வார்த்தை இரண்டு முறைவருகிறது. அகவலில் சத்தியம் சத்தியம் சத்தியம் என்றே இத்தகை வழுத்தும் என் தனிச் சத்தே என்ற வரியில் சத்தியம் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது. மேலே உள்ள இந்தப் பாடலில் சத்தியம் என்ற வார்த்தை நான்கு முறை வந்துள்ளது. இதற்கெல்லாம் ஏதாவது காரணம் இருக்குமோ
Write a comment