சினம் என்பது உள்வேக்காடு.வெகுளி என்பது மேல் விழுந்து கூவுதல் போன்ற செயல்கள். ஆக இரண்டும் கோபத்தின் வெளிப்பாடுகளே ஆகும். ஒன்று தேகத்தை நஷ்டம் செய்யும். மற்றொன்று ஆயுளை நஷ்டம் செய்யும்.எல்லாம் படிக்கிறோம் ஆனால் கோபத்தைத்தான் விட்டபாடில்லை. என்ன செய்வது. நம்முடைய ரோஷம் ,மானம் போன்றவைகளை விட்டால் கோபம் போகும் என்கிறார் ஒரு பாடலில்.
ஒருவன் ஏதோ தவறு செய்கிறான். அவன் செயல் நமக்குக் கோபம் உண்டாக்குகிறது.நாம் அவனைத் திட்டுகிறோம் .சீ என்று பேய் என்று நாய் என்று யார் மற்றவர்களைத் திட்டுகின்றார்களோ அவர்கள் தெளிவு இல்லாதவர்கள் என்று தெய்வ மணிமாலை ஒன்பதாவது பாடலில் வள்ளலார் கூறியுள்ளார். மனிதன் என்றால் தவறுதான் செய்வான் என்று நாம் உணர்ந்துகொண்டால் நாம் யாரையும் திட்டமாட்டோம்.குற்றம் புரிவதே மனித இயல்பு. குற்றம் புரிந்தோரை நாம் வெறுக்காமல் திட்டாமல் குணமாகக் கொள்ள முயற்சி செய்வோம்