திரு அருட்பா நடராஜ பதி மாலையில் ஒரு பாடல்.
வாட்டமொடு சிறியனேன் செய்வகை அறியாது மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலை மறந்து துயில்கின்ற போது
நாட்டமுறு வைகறையில் என்னருகணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நலிதல் அழகோ எழுந்தே
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க நல் அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே ..........(அருட்பா)
இறைவனே வள்ளலாரிடம் வந்து அவரை எழுப்பி யோக ஞானம் எல்லாம் செய்யாமல் நலிந்து போகாதே என்று கூறியதை ஏற்று வள்ளலாரே தவம் செய்திருக்கின்றார்.அதன் பலனையும் முழுமையாக அடைந்து இருக்கின்றார் என்றால் நாம் தவம் வேண்டாம் என்று சொல்வது சரியா? தவ உஷ்ணத்தினால் மட்டுமே தேக மாற்றம் ஏற்படும் என்பதை உணர்வோமாக.
Write a comment