மூன்றுபேர் ஒரு பெரிய நகரத்திற்குச் சென்றனர்.அங்கே தங்குவதற்கு ஒரு பெரிய லாட்ஜில் நூறாவது மாடியில் அவர்கட்கு ஓர் அறை கிடைத்தது. அங்கே தங்கினர்./மறுநாள் கீழே இறங்கி வந்து கடைகளுக்குச் சென்று சில பொருட்கள் வாங்கிக்கொண்டு லாட்ஜிற்குத் திரும்பினர். அவர்கள் துரதிஷ்டம் அப்போது மின்சாரம் இல்லை.நூறு மாடி ஏறவேண்டுமே என்று திகைத்தனர். ஒருவன் நான் கதை சொல்லுகிறேன் கதை கேட்டுக்கொண்டே மேலே ஏறலாம் என்றான். அதற்கு மற்றவர்கள் ஒப்புக்கொண்டனர்.அவன் கதை சொல்லச்சொல்ல மாடிப் படி ஏறிக் கொண்டேவந்தனர் ஒருவழியாக ஐம்பது மாடி ஏறிவிட்டனர். கதை சொன்னவன் இதற்கு மேல் எனக்கு கதை தெரியாது என்று சொல்லிவிட்டான்.அடுத்தவன் நான் சொல்கிறேன் என்று கதை சொல்லத்தொடங்கினான். கதை கேட்டுக்கொண்டே நாற்பத்து ஒன்பது மாடிகள் ஏறிவிட்டனர்.அவனும் எனக்கு இதற்கு மேல் கதை தெரியாது என்று சொல்லிவிட்டான். இருவரும் மூன்றாவது ஆளைப் பார்த்து நீ ஒரு கதை சொன்னால் போதும். அடுத்த ஒரு மாடியை ஏறிவிடலாம் என்றார்கள். அவன் என்னை எதுவும் கேட்கவேண்டாம் நான் சொன்னால் மிகவும் வருத்தப்படு வீர்கள் என்றான். பரவாயில்லை சொல் என்றார்கள், நான் நமது அறையின் சாவியை கீழேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்றான். சாவியை எடுத்துக் கொண்டுவர மறுபடியும் தொண்ணூற்று ஒன்பது மாடிகள் இறங்கி சாவியை எடுத்துக்கொண்டு மறுபடி நூறு மாடிகள் ஏறிவரவேண்டும்இந்தச் சாவிதான் ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் இல்லாமல் ஆன்மீகத்தில் எவ்வளவுதான் உயர்ந்து உயர்ந்து சென்றாலும் மறுபடியும் இறங்கி வந்து ஜீவகாருண்யம் வழியாகவே இறை அருளை அடையமுடியும்
Write a comment